பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமுது பெண்டிர் கேட்ட நற்சொல் ど。5°

குடிலை அடைந்தாள். அது இளங் கன்று. சிறிய கயிறு கொண்டு கட்டப்பட்டுள்ளது. தாயைப் பிரிந்து தனித்து விடப்பட்ட துயரம் ; மாலை ஆகியும் தாய் முகம் காணாத துயரம் பகலெல்லாம் பால் உண்ணாமையால் உண்டான பசித் துயரம், ஆக அடுக்கடுக்கான துயர் மிகுதியால் துடித்துக்கொண்டிருந்தது அக்கன்று.

தாயைப் பிரிந்து தனித்து விடப்படுவது, தனக்குத் துயர் தரும் என்றாலும், தாய் பிரிந்து சென்றது, தனக்கு நிறைய பால் தருவான் வேண்டி, காட்டில் செழித்து வளர்ந்திருக்கும் பசும்புல்லை வயிறார மேய்வதற்காகவே என்பதை உணர்ந்து, பிரிவுத் துயரத்தைத் தாங்கியிருந்த கன்று, தாய் வந்து சேர வேண்டிய காலம் கடந்து விட்டமையால் கலக்கம் உறுவ தாயிற்று. கன்றின் மீது பேரன்புடையது பசு; கன்றை விட்டுத் தன்னைப் பிரிப்பதைத் தாங்கிக் கொள்ளாதது. தாய்ப் ப்சுவின் இவ்வியல்புகளைக் கன்று பிரிகாரா' என்ற தொடரால் புகழ்வர் புலவர். அத் துணைப் பேரன்புடைய தாய்ப்பசு, புல் உண்ணும் தொழில் முடிந்ததுமே விரைந்தோடி வந்திருக்கும்; வரவில்லை என்றால் ? அதை வரவொட்டாவாறு யாதேனும் தடுத்திருக்குமோ! அதனால் அதற்கு யாதேனும் இடர் வந்திருக்குமோ என்ற எண்ணங்கள் எழவே, கன்று கவலத் தொடங்கிவிட்டது. காரணம் அறியாக் கொடுந் துயர் காரணமாக, அது அலமரத் தொடங்கி விட்டது. கன்றின் துயர் கண்டு கண்கலங்கி நின்ற அவள், கன்றை விடுத்துக் கறவையை ஒட்டிச் சென்ற கோவலர், காலம் கடத்தாது, தாய்ப் பசுவைக் கன்றிடம் கொண்டு சேர்க்கவேண்டுமே என்ற எண்ணம் இலராய்க் காலம் கடத்திக், கன்றுக்குக் கொடுமை செய்வதுணர்ந்து, அவர் மீது சினம் மிகக் கொண்டாள். கோபம் கொண்டாள் எனினும், கோவலர் தம் கணவர் என்பதால் அதைக் கோவலர் மீது காட்ட மனங்கொள்ளாது, கறவைகளை ஒட்டிச் செல்ல உதவும் கோவலர்