பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

認顧 முல்லைப்பாட்டு

கைக்கோல் மீது காட்டினாள். கொடுங்கோல்' என அதைப் பழித்தாள். காலம் கடத்தி விட்டனர் எனச் சினங்கொண்டாள் எனினும், ஆனிரைகளுக்குப் புல்லும் புனலும் காட்டிப் பேணும் அவர்களின் அன்புள்ளத்தை அறிந்திருந்ததனால், அவர்கள், இக்கன்றின் நிலை உணர்ந்து கறவைகளை விரைந்து கொண்டு வந்து சேர்ப்பர் என உறுதியாக நம்பினாள். அதனால், நடுங்கும் கன்றின் அருகில் அமர்ந்து, அதை அன்பொழுகத் தழுவி, உன் நினைவால் இயல்பாகவே விரைந்து ஓடிவரும் உன் தாயைப் பின் தொடர்ந்து வரும் ஆயர், மேலும் விரைந்து துரத்துவர். ஆகவே உன் தாயும், ஆயரும், இப்போதே, இந்நாழிகையே வந்து சேர்வர், வருந்தாதே' என வாய்விட்டுக் கூறினாள்.

'சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் - அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத் த கையள்,

- - - ●事}ö星鲇 o, . கொடுங்கோல் கோவலர் பின்நின்று உயத்தர ; : . A - - இன்னே வருகுவர் தாயர் என்போள்" * (12–16)

(சிறுதரம்பு தொடுத்த-சிறிய கயிற்றினால் கட்டப்பட்ட பசலைக் கன்றின் - இளங்கன்றின். உறுதுயர் அலமரல் நோக்கி-மிக்க துயரினால், நிலையின்றித் தவிப்பதைப் பார்த்து. ஆய்மகள்-இடைச்சாதி மகள் நடுங்கு சுவல்குளிரால் நடுங்கும் தோளை அசைத்த கையள் - கட்டிக் கொண்ட கைகளை உடையவளாய் நின்று கைய கொடுங்கோல் கோவலர் - கையில் பிடித்த கொடிய கோலையுடைய ஆயர் : பின் நின்று உய்த்தர - பின்னால் இருந்து துரத்திவர தாயர் - உன்னுடைய தாய்ப் பசுக்கள்; இன்னே வருகுவர் - இப்போதே வந்து சேர்வர்; என்போள் - என்று கூறினவளுடைய)