பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமுது பெண்டிர் ஆறுதல் உரை 37

தாயைப் பிரித்துத் தனித்து விடப்படுவது, தனக்குத் துயர் தரும் என்றாலும், தாய் பிரிந்து சென்றது, தனக்கு நிரம்பப் பால் தரு வான் வேண்டி, காட்டில் செழித்து வளர்ந்திருக்கும் பசும் புல்லை வயிறார மேய்வதற்காகவே என்பதை உணர்ந்து, பிரிவுத் துயரை ஒரு வாறு தாங்கி இருந்த கன்று, தாய் வந்து சேர வேண்டிய கால்ம் கடந்துவிடக் கண்டே கலங்கிய நிகழ்ச்சி, தன்ன்ைத் தனியே இருக்கவிடுந்துத் தலைமகன் பிரிவது, தனக்குத் துயர்தரும் என்றாலும், தலைவன் பிரிந்துபோவது, தன் இல்லறம் இனிது நடைபெறுவதற்குத் துணை நிற்கும் பெரும் பொருள் ஈட்டி வரவே என்பதை உணர்ந்து, பிரிவுத் துயரை ஒருவாறு தாங்கி இருந்த தலைவி, தலைவன் வருவதாகக் குறித்துச் சென்ற கார்காலம் வரவும் வராமை கண்டே வருந்தினாள் என்ற, தலைவி செயலைக் குறிப்பால் உணர்த்துவது காண்க. -

'கொடுங்கோல் கோவலர்' (நெடுநல் வாடை : 3) கொடுங்கோல் கல்லாக் கோவலர் (அகநானூறு 7 ) என்ற தொடர்களிலும், கோவலரின் கைக்கோலின் கொடுமை கூறப்பட்டிருப்பது காண்க : -

பெரு முது பெண்டிர் ஆறுதல் உரையும் அவள் கிலையும்

வருவதாகக் குறித்துச் சென்ற கார்காலம் வந்து விட்டது. ஆனால் அவர் ஊர்ந்து சென்ற தேர் வந்திலது என்ற கவலை மிகுதியால் வருந்துவாள் துயர் தீர்க்க, அவர் எப்பொழுது வருவார் என்பதை அறிவான் வேண்டி, வழிபாடு ஆற்றிய நிலையில், ஆயர் மகள் கன்றை நோக்கி, "உம் துயர் தீர உம் தாயர் இன்றே வருவர்' எனக் கூறிய சொல் நற்சொல்லாய் அமைய அது கேட்ட பெரு முது பெண்டிர், தலைவி.பால் விரைந்து சென்று, "உன் துயரைப் போக்குவது மட்டுமல்லாமல், உனக்கு இன்பம் தர வல்ல நளிை மிக் நல்ல சொல்லைக் கேட்டு வந்தோம். அந்நற்சொற்கள் யார் வாயிலிருந்து