பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 - முல்லைப்பாட்டு

வெளிப்பட்டனவோ அவர்கள், ஐயறிவுடைய உயிர்கள் மாட்டும் அன்பு காட்டும் பேருள்ளம் வாய்க்கப்பெற்ற நல்லவர். 'கோவலர் வாழ்க்கை கொடும் பாடு இல்லை’ என்ற புகழுக்குரிய நல்லினத்து ஆயர் மகளிர். ஆகவே, அவர் வாய்ச்சொல், நற்பயன் அளிக்காது போகாது. போர்க் களத்தில் எதிர் நின்று போரிட இயலாது, பகைவர் தோற்றோடிவிட, அவர்க்குரிய மண்ணைத், தலைவர் தமதாக்கிக் கொள்ள, அதுகண்ட அப்பகைவர், தலைவரைப் பகைத்து நிற்பது விடுத்துப் பணிந்து வந்து திறையாகப் பொன்னும் மணியும் கொடுத்து நிற்க, அவ்வாசையால், பெரும் பொருள் ஈட்ட வந்த தம் கடமை குறைவற முடிவுறவே, தலைவர் இப்போதே விரைந்து வந்து சேர்தல் உறுதி. ஆகவே, மாயோய் ! அவர் வாராமை கண்டு பலப்பல எண்ணிக் கலங்கும் உன் மனத்துயரைக் கைவிடுவாயாக’ எனக் கூறித் தேற்றுவாராயினர். .

பெரு முது பெண்டிர், தலைவன் விரைந்து வந்து சேர்வான் என்பதை உறுதி செய்யவல்ல, இதுபோலும் காரணங்களை அடுக்கடுக்காக எடுத்துக் காட்டினார். பிரிவறியாப் பேரன்பினளாய தன்னைத், தனித்து விடுத்துக் கணவர் பிரிந்து போவது, தான்் புகழ்மிக்க இல்லறம் இனிது நடத்துதற்குத் துணை புரியவல்ல பெரும்பொருள் ஈட்டி வருதற்கே என்பதை அறிவாள். ஆதலின் அவர் பிரிவை அவளும் ஒரு வாது தாங்கிக் கொண்டுதான்் இருந்தாள். ஆனால், வருவதாகக் குறித்துச் சென்ற காலம் கடந்து விட்டது. கருதிச் சென்ற பொருளை ஈட்டுவதற்குத் தேவைப்படும் காலத் திற்கும். மேலாக நீண்டுவிட்டது. கடமை முடிந்து ஒரு கணமும் தாமதியாப் பேரன்புடையவர். கடமையைக் குறித்த காலத்தில் முடிக்கவல்ல திண்ணியர்; கூறிய சொல்வழி நிற்கும் பெரிய வாய்மையாளர். அதனால் குறித்த காலத்தில் அவர் வந்து சேர்ந்திருக்க வேண்டும்: வந்து சேரவில்லையென்றால், அவரை வரவிடாது