பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமுது பெண் டிர் ஆறுதல் உரை 39

யாதோ ஒன்று தடுத் திருக்க வேண்டும். அது யாதோ ? அல்லது அவருக்கு யாதேனும் தீங்கு நேர்ந்திருக்குமோ ? என்பன போலும் எண்ண அலைகளே ஓங்கியிருந்தமை யால், அவள் உள்ளமும், உணர்வும் அப் பெருமுது பெண்டிர் காட்டிய காரணங்களைக் காண மாட்டா வாயின. அவள் உள்ளத்தில் கலக்கமே மேலோங்கி இருந்தது. அவள் உள்ளக் கலக்கம், அவளுடைய குவளை மலர் நிகர் கண்கள், முத்து முத்தாகச் சிந்தும் நீர்த்துளிகள் வடிவில் வெளிப்படலாயின. இஃது இவள் நிலை. அவன் நிலையைக் காண்போம்:

என்போள் தன்னர் நன்மொழி கேட்டணம் ; அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் : தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர், வினைமுடித் து வருதல் தலைவர் வாய்வது ! நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் ! எனக் காட்டவும் காட்டவும் கானாள், கலுழ்சிறந்து. பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப’’ -

(17-23)

என்போள் - என்று கூறின ஆயர் மகளுடைய நன்னர் நன்மொழி - மிக நல்ல சொற்களைக்: கேட்டனம்-கேட்டு வந்தோம்; அதனால் - அதனால், நல்லோர் வாய்ப்புள் நல்ல அந்நல்லோர் கூறிய விரிச்சியாகிய நற்சொல் நல்லனவே ஆதல் அறிகுவை ; தெவ்வர் முனைகவர்ந்துபகைவர்க்குரிய மண்ணை வெற்றி கொண்டு கொண்ட திறையர் - அவர்கள் பணிந்து கொடுக்கப் பெற்றுக் கொண்ட திறைப் பொருள்களை உடையர்ாய். தலைவர் வருதல் வாய்வது - தலைவர் வருவது உறுதி : மாயோய் - மாயோய் ! நீ சின் பருவரல் எவ்வம் - நீ, உன்னுடைய உளத்தடுமாற்றம் காரணமாக எழும் மனத் துயரை : களை என - கைவிடுவாயாக என்று காட்டவும்