பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 முல்லைப் பாட்டு

காட்டவும் - பல காரணங்களைப் பலகாலும் எடுத்துக் காட்டவும் ; காணாள் - காண மாட்டாளாய் ; கலுழ் சிறந்து-கலக்கம் மிகுந்து; பூப்போல் உண்கண் - பூப் போலும் மையுண்ட கண்கள் புலம்பு முத்து உறைப்பதுளிதுளியான நீரை முத்து முத்தாகச் சிந்த,

இன்னே வருகுவர் தாயர்' என்பது Gerು கேட்கும் சொல் நற்சொல் ஆதல் மட்டும் போதாது. அச்சொல்லைக் கூறுவாரும் நல்லவராதல்வேண்டும். "திரைகவுள், வெள்வாய்த் திருந்து வீழ்நாடி. நரை முதியோர் நின்று உரைத்த நற்சொல்' என்ற புறத் திரட்டுப்பாட்டில் (756) நற்சொல் உரைத்த நரை முதியோர் நலமெல்லாம் பாராட்டப் பெற்றிருத்தல் 古f了Gö”品。

பாசறை அமைப்பு

'கார்ப் பருவத் தொடக்கத்தே வந்து சேர்வன்' எனப் பிரிந்து போகும் காலத்தில் கூறிச்செல்லும் 2.69 fr தப்பாவாறு வந்து சேரும் இயல்புடையவன் தலைவன். இப்போது கார்ப்பருவ வரவு கண்டு இவள் இவ்வாறு வருந்த விடுத்து வரா திருப்பது ஏனோ ? இவள் ஈண்டு வருந்திக் கிடக்க வராதிருக்கும் அவன் நிலையாதோ ? என்ற வினாக்கள் இயல்பாக எழும் என்பதை அறிந்த புலவர், தலைவனின் ஆண்டைய நிலையை எடுத்துக் கூறத்தொடங்கினார்.

தன்னேரில்லாப் பெரு வீரன் தலைவன். தன் னினும் இளைத்தார் மீது போர் தொடுப்பது அவன் தகுதிக்கு ஏற்புடையதன்று. மாறன்மையின் மறம் வாடும் என்று இளையாரையும் ஏறியான்' என்பர் திருத்தக்க தேவர் (சீவக சிந்தாமணி : 2281). ஆகவே எளியார் மீது போர் தொடுப்பதிலன் : பணியமறுத்து, அவனையும் பகைத்து நிற்கவல்ல பேராண்மையாளர் மீதே அவன். போர் தொடுத்து எழுவான். ஆகவே பகைநாட்டு