பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை அமைப்பு 4 Å.

மண்ணைக் கைக்கொண்டு பகையாளரைப் பணிய வைத்து, அவர் பால் திறையாகப் பொன்னும் நவமணியும் போலும் பெரும் பொருள் கொண்டு மீள்வது, அத்துணை எளிதில், அத்துணை விரைவில் முடியக் கூடியது அன்று. -

அக்கருத்தோடு போர் தொடுத்துச் செல்லுவார், நேரே பகை நாட்டினுள் நுழைந்து விடுதல் இயலாது. பகை நாட்டார் தம்நாடுகளைச் சூழ க், காவற் காடுகளை வளர்த்து, அக்காடுகளின் இடையிடையே, ப ைக ப் ப ைட எளிதில் நுழைந்து விடாவாறு அப்படையைத் தடுத்து நிறுத்துவதற்கேற்ற, குறுகிய வாயில்களைக் கொண்ட சிற்றரண்களை, நெடுக. அமைத்து, அவ்வாணகத்தே அக்காட்டுவாழ் மக்களாம் வேட்டுவர்களையே கொண்ட சிறுபடைகளை நிறுவி வைத்திருப்பர். -

பகைநாட்டு மண்ணில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னர், அதற்கேற்ற காலம் இடங்களை அறிந்து கொள்வது வேண்டுமாதலின், அப்பகை நாட்டின் புறத்தே, சில நாள் தங்கவேண்டி நேரும். மேலும், பகை நாட்டைக் கைக்கொள்ளும் முயற்சி, ஒரே நாளில் வெறறி பெற்றுவிடும் என்றும் சொல்ல இயலாது. பல நாள் போரிட வேண்டி நேரிடவும் செய்யும். அதனால், அந்நாட்களில் தன் நாற்படை இருத்தற்கு ஏற்ற ஓர் இடத்தை அமைத்துக்கொள்வது இன்றியமையாததாகி விடும். ஆகவே, பகை நாடுநோக்கிச் செல்லும் அரசர், அப்பகைநாட்டு எல்லையில் உள்ள, காவற் காட்டில் ஒருபாசறை அமைத்துக் கொள்ள முனைவர்.

நாற்படை இருத்தற்கேற்ற பரந்து அகன்ற இடம் கிடைப்பது அரிது. அதனால், காட்டாறுகள் நிறைந்த அக்காவற்காட்டில் வளர்ந்து மண்டிக் கிடக்கும் செடி கொடிகளால் ஆன சிறுதுாறுகளை வெட்டி எறிந்தும், ! கொளுத்தி எரித்தும் அகற்றிப், பாசறை அமைத்தற்