பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 முல்லைப் பாட்டு

கேற்ற பரந்த இடம் காண முயல்வர். அது நிகழும் போது, அந்நாட்டிற்குக் காவலாய் அக்குறுங்காட்டில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் வேட்டுவப் படை வாளா இராது. வந்தோர் முயற்சியை முறியடிக்க முன்னேறி வந்து போரிடத் தொடங்கும். ஆகவே, பாசறை அமைப்பதற்கு முன்னர் அவ்வேட்டுவட படைகளையும் அப்படைகளின் இருக்கையாம் சிற்றரண்களையும் அழிக்க வேண்டிவரும். .

துாறுகளை அகற்றிக்கொண்ட, கடல்போல் பரந்த இடங்களைச் சுற்றிலும், கோட்டையைச் சுற்றி அமையும் நெடுமதில்போல், முள் மரங்களின் பெரிய பெரிய கிளைகளை வெட்டி நெருங்க நட்டுவைப்பர்டு அது முடிந்த பின்னர், படைவீரர் தங்குவதற்கேற்ற இருக்கைகள் அமைத்துக்கொள்வர். வரிசை வரிசை யாகவும், நான்கு தெருவுகள் ஒரிடத்தே சந்திக்கும் நாற்சந்திகள் அமையுமாறும் தெருவுகளை அமைத்து, அவற்றின் இருமருங்கிலும் காட்டு இலைகள் வேயப் பெற்ற குடில்களை அமைத்துக் கொள்வர்.

அவ்வாறு அமைந்த நாற்சந்திகள் தோறும், அக்குடில்களில் பாடிகொண்டிருக்கும் படைவீரர் களுக்குப் பகைவராலும், பிற காட்டுக் கொடு விலங்கு களாலும் ஊறு நேராமை கருதி, காவலாக, யானைகளை நிறுத்தி வைப்பர். அவ்வாறு நிறுத்தும்போது, யானை களுக்குச் சிறந்த இலக்கணமாகக் கூறப்படும், மத நீர் வடியும் கதுப்பும், நுண்ணிய பார்வைவல்ல சிறிய கண்களும், நீண்ட தந்தங்களும் உடைய களிறுகளையே தேர்ந்தெடுத்து நிறுத்திவைப்பர். அவ்வாறு நிறுத்தி வைத்திருக்கும் களிறுகளுக்கு அவை விரும்பி உண்ணும், செழித்து நீண்டு வளர்ந்த கரும்பு, வயல்களில் நெற்பயிர் களுக்கிடையே விளைந்து கதிர் சனாது நிற்கும் சாவி, இனிய அதிமதுரத் தழை ஆகியவற்றை, அக்களிறுகளின் முன்னே, பெரும் போரெனப் போட்டு வைப்பர். ஆனால்,