பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை அமைப்பு 43

அக்களிறுகள், காவல் மீதே கருத்துக் கொண்டு விடுவதால், தம் துதிக்கையால் வாரி எடுக்கும் அவற்றை வாயுள் இட்டு உண்பதற்குப் பதிலாக, அவற்றால் தம் நெற்றியில் வடியும் மத நீரை மொய்க்கும் வண்டுகள்ை ஒட்டுவான்வேண்டி, அந்நுதலைத் துடைத்துவிட்டு, அப்படியே தம் துதிக்கையைத் தம் நீண்ட கோடுகள் மீது மடித்துப் போட்டுக் கொண்டு செம்மாந்து நிற்கும்.

களிறுகளின் செயல் அதுவாக அவற்றைப் பேணி, காக்கும் தொழில் மேல் சென்ற கருத்துடைமையால், அத்தொழில் அல்லது வேறு அறியாப் பாகர், அவை உண்ண மறுத்தாலும், அவற்றை உண்ண வைப்பது தம் கடமை என்பதை உணர்ந்து, அக் களிறுகள் உண்ர்ந்த வடமொழியில் 'அப்புது அப்புது : ஆது, ஆது ; ஐ. ஐ' என்ற சொற்களால் உணர்த்தியும், கவைத்த முள்ளை உடைய குத்துக் கோலால் குத்தியும் உண்ணச் செய்து விடுவர்.

புறக்தே இடுமுள்வேலியும், அகத்தே களிறுகளும் காவலாய் அமைய அமைந்த அப்பாசறையின் ஒரு பகுதி, வில்வீரர்களின் உறைவிடமாகும். அவ்வீரர்கள், தம்மினும் இளையார் மீதும், கையில் படைக்கலம் இல்லார் மீதும், போரில் தோற்று ஒடுவார் மீதும் அம்பு ஏவுவது ஆண்மை உடையார்க்கு அறமோ அழகோ அன்று என்பதை உணர்ந்தவர்கள், எதிர்த்துப் போரிடும் பகைவர், எத் துணை வல்லவராயினும், அவரை வெற்றி கொண்டு மீள்வதல்லது, அவர்க்குத் தோற்றுப், பின்னிடாப் பேராண்மையாளர். அதற்குத் துணை செய்யும் பெரிய வலிய வில் உடையவர். அத்தகைய அவ்வில்வீரர்கள், போர் முரசு கொட்டியதும் வில்லேந்தி விரைவதற்கு ஏற்ற நிலையில், தம்முடைய பெரிய வில்களை வரிசை வரிசையாக நாட்டி, அவற்றிலேயே அம்புகள் நிறைந்த துாணிகளையும் மாட்டிவைத்திருப்பர்.