பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 முல்லைப்பாட்டு

வில்லை நாட்டி, அதில் அம்பறாத்துாணிகளை மாட்டி வைத்திருக்கும் காட்சி, காவிக் கல்லை இடித்துப் பொடியாக்கிக் கரைத்த கலவையில், தோய்த்து எடுத்த காவி உடைகளை உடுத்தித் தவ வாழ்க்கை மேற்கொண் டிருக்கும் பார்ப்பனத் துறவிகள், நீர் நிலைகளில் நீராடி முடித்த பின்னர் அழுக்கு போகத்ப் துவைத்து எடுத்த தம் காவி ஆடைகளை, தாம் எந்திவரும் முக்கோல்களை நட்டு, அம்முக்கோல்கள் மீதே ஈரம்புலர உலர்த்தி வைத்திருக்கும் காட்சியை நினைவூட்டி, பார்ப்பனத் தவசிகள் அன்பு வழியில் எந்த உலக நல்வாழ்விற்கு நோன்பு கிடக்கின்றனரோ, அதே உலக நல்வாழ்விற்குத் தான்் அறப்போர் வழியில் இவ்வில் வீரர்களும் பணி புரிகின்றனர் என்ற, ஒருமைப்பாட்டுணர்வை உணர்த்து வதாக இருக்கும்.

வில் வீரர் இருக்கை இவ்வாறு ஒருபால் அமைந் திருக்க, வேல் வீரர் இருக்கை மற்றொருபால் அமைந் திருக்கும். இடையே உயர்ந்த கால்களும், இரு பக்கங்களிலும் குறுகிய கால்களுமாக நட்டு, அவை ஒவ்வொன்றையும் கயிறு கொண்டு வலித்துப், படாம் போர்த்து இயற்றிய கூடாரங்களை நிறுவியிருப்பர். தம்மைத் தாங்கிச் செல்லும் வீரர்கள், போரில் பெற்ற வெற்றிச் சிறப்புக்களைக் குறிக்க வல்ல வேறுவேறு

பூத்தொழில்கள் செதுக்கப்பட்ட வேற்படைகளை, வரிசை வரிசையாக நாட்டி, அவற்றின் இடையிடையே வேற்படையாளர். பகைவர் வேல் தம் மெய்யைத்

தீண்டாதவாறு மறைத்துக் காத்துக்கொள்ள, இடது கைகளில் ஏந்திச் செல்லும் கேடயங்களைப் பிணைத்து வைத்திருப்பர்.

இதுபோலவே, தேர், யானை, குதிரை வீரர் களுக்குமாகத் தனிக் தனி இருக்கைகள், ஆங்கு இடம் பெற்றிருக்கும். தேர் மீதும், யானை மீதும், குதிரை மீதும் சென்று போரிட்டாலும், கையில் வில் ஏந்தாது