பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ்மொழி இனிமை வாய்ந்தது. 'இனிமையால் இயன்ற இளமகளிர்' என்ற பொருள்படவந்த தமிழ் தழிஇய சாயலவர் ' என்ற தொடரில் வரும். 'தமிழ்' என்ற சொல்லே, இனிமை எனும் பொருள் தருவதாகும் எனக் கூறித், தமிழ் மொழிக்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளார், சீவக சிந்தாமணி என்னும் பெருங் காப்பியப் பேராசிரியர் திருத்தக்க தேவர். --

இனிய சொற்களைத் தேர்ந்து, இனிமையாக ச் சொல்லாட விரும்பிய தமிழர், தாம் கூற விரும்பும் ஒவ்வொரு கருத்தும் இனிமையுடையவாதல் வேண்டும் : இனிக்கும் வகையில் உரைக்கப் பெறுதல் வேண்டும் எனவும் விரும்பினார்கள். அவ்வாறே உரைத்தும் வந்தார்கள். செந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் இச் சிறப்புடைய வாம். - 'உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்' என்றார் ஒரு பெரியார். தமிழர் வாக்கு இனிமை வாய்ந்தது என்றால், அவர் உள்ள மும், அவ்வுள்ளம் உந்த உளவாகும் அவர் செயல் பாடும் இனிமை வாய்ந்தனவே ஆகும். இது, உண்மை என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் படப் பிடிப்பினைக் காணும் வாய்ப்பினைப் பெற்றார் அனைவரும் உணர்வர்:

பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நம் பழப்பெரும் மூதாதையர் தம் பண்பாட்டுப் பெருமை யினை, இற்றைத் தமிழரும், பிறரும் அறிந்து கொள்ளு தல் வேண்டும் என்ற அவாவின் விளைவாக , அக்காலப் புலவர் பெருமக்கள், ஆயிரம் ஆயிரம் பாக்களைப் பாடிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் பாடிச் சென்ற அப் பாக்களின் களஞ்சியத்தைக் காக்கத் தவறி