பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலத்தவர்களும் நிகழ்ச்சிகளும் 73

விளக்குகளில், நீண்ட திரியிட்டு ஏற்றிய விளக்குகள். அவியும் தொறும் கொளுத்திக் கொண்டிருந்தனர்.

நீண்ட நாக்கினை உடையனவும், தெள்ளிய ஒசையை உடையனவுமாகிய மணியின் ஒசை அடங்கிய நள்ளிரவிலும், மோசிமல்லிகை மலர்ந்து, எப்போதும் அசைந்து கொண்டேயிருக்கும் கொடிகள் படர்ந் திருக்கும், காட்டுச்சிறு துாறுகள், மெத்தென வீசும் காற்றுக்கு ஆடுவதுபோல, வெண் துகிலால் தலைப்பாகை கட்டி, உடலைச் சட்டை இட்டுப் போர்த்திக்கொண்டு இருக்கும், தளர்ந்த நடையினையும், அதே நேரத்தில் உயர்ந்த ஒழுக்கத்தினையும் உடைய, ஆண்டால் மிக மிக முதிர்ந்த மெய்க்காப்பாளர்கள், அரசனுக்குக் காவலாக வலம் வந்து கொண்டே இருப்பர்.

கழிந்த நாழிகை இவ்வளவு ; கடக்க வேண்டிய நாழிகை இவ்வளவு; இப்போதைய நாளிகை இவ்வளவு என்ற நாழிகை அளவை அறிந்து, தாம் கூறும் நாழிகைக் கணக்கினைச் சிறிதும் பிழைபட்டுப் போகாவாறு துல்லியமாக அறிந்து காணவல்ல நாழிகைக் கணக்கர், த்ொழுதற்குக் கூப்பிய கையினை உடையராய், அரசன் முன் சென்று நின்று, அவனை வாழ்த்திய பின்னர், அலை வீசும் கடல் சூழ்ந்த அப்பேருலகில், பகைவெல்ல படையோடு வந்து பாடிக் கொண்டிருக்கும் வேந்தே ! 'குறுநீர்க்கன்னல் காட்டும் நாழிகை, இப்போது 'இத்துணையவாம். என்பதை அவ்வப்போது எடுத்து இயம்பிக் கொண்டே இருப்பர். -

குதிரையை அடித்துத் துரத்த பயன்படுத்தப்பெறும் வாராகிய சம் மட்டி, வளைந்து கிடக்கின்ற, மடங்கி, மடங்கிக் கிடந்து சிறிதே புடைத்துத் தோன்றுமாறு, இறுகக்கட்டின சட்டை அணிந்து, காண்பார்க்கு அச்சம் ஊட்டும் தோற்றத்தினையும், இயற்கையிலேயே வலுவோடு கூடிய உடலினையும். தறுகண்மையினையும் உடைய, யவன நாட்டுக் கைவினைஞர்கள், புவிச்ச்ங்கிலி