பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘78 முல்லைப் பாட்டு

உண்பிப்பான் வேண்டி, இரு கூறாக்க வைத்த முள்ளினை உடையவாகிய குத்துக் கோலால் குத்தியும் , வடமொழியால் ஆன ஏவல் சொற்களால் பலமுறை ஆணையிட்டும். யானைகளைப் பழக்கும் அறிவல்லது. வேறு அறிவினைத் தரவல்ல கல்வி எதையும் கற்காத பாகர்கள், அக்களிறுகள், தம் முன் போடப்பட்டிருக்கும் அவ்வுணவுப் பொருட்களைக் கவளம் கவளமாக எடுத் துண்ணும்படி செய்ய, தன் ஆடையை, அழுக்குப் போகத் தோய்த்துப் பின்னர்க் காவிக்கல் கலவையில் தோய்த்து எடுத் து உடுத்திக்கொள்வான் வேண்டி, அதன் ஈரம் போக, தவவேடம் உடைய பார்ப்பான், தன்கை முக்கோலை நட்டு அதன் மீது போட்டிருப்பது போல், அறவழி ஆற்றும் போரில், தோற்றுப் பின்னிடாமைக்குத் துணைபுரிவன வாய விற்படைகளை நட்டு, அவற்றின் மீதே, அம்புத்து றாணிகளை மாட்டி, கால்களைக் 1.கூடமாக நட்டு, கயிறு கொண்டு வலித்துக் கட்டிய கூடாரங்களில், அழகிய பூவேலைப்பாடு * அமைந்த வேற்படைகளை நட்டு, அவற்றினிடையே கேடயங்களை, வரிசை வரிகையாகப் பிணித்து, இவ்வகையால், வளைந்த விற்படையால் ஆன அரனே அரணாக அமைந்த, அக்காட்டுப் பாசறைக்கண் பல்வேறுபட்ட பெரும் படைகளின் நடுவே, நெடிய குத் துக்கோல்களை நாட்டி, அவற்றில் திரைச்சீலைகளை மதில் போல் வளைத்துக் கட்டி, அதற்கு உள்ளாகவே. அரசனுக்கு என, வேறு ஒரு தனி இருக்கையினை ஆக்கிவிட அவ்விருக்கையுள், சிறு சிறு தொடிகளை அணிந்த கைகளையும், கூந்தல் கிடந்து அழகு செய்யும் சிறிய முதுகினையும் உடைய, இரவைப் பகலாக்கச் செய்யவல்ல மேரொளி விசும், உறுதியான கைப்பிடியினையும்; கூர்மையால் ஒண்மை யினையும் உடைய குறுவாளை, வரிந்து கட்டிக் கொண்டிருக்க மேலணியாம் கச்சுக்குள் பாதுகாப்புக் காகக் கட்டிக்கொண்டிருக்கும் பணிமகளிர், கைகளில் எண்ணெய் உமிழும் சுரைகளை உடையராய், பாவை