பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலத்தவர்களும் நிகழ்ச்சிகளும் 7 7

நிறம் வாய்ந்த காரிகை நல்லாளே! உன் பிரிவுத்துயரைக் கைவிடுவாயாக' எனப்பல முறை எடுத்துக் கூறவும், அவள், அவள் உரைகளால், அமைதி காணமாட்டாளாய், மாறாக, மேலும் கலக்கமே கொள்ள, பூப்போலும், மை தீட்டப்பட்ட கண்கள், துளித்துளியாக, முத்து முத்தாக நீரைச் சொரியலாயின.

முல்லை நிலத்தலைவியாம் அரச மாதேவியின் நிலை, இதுவாக, காட்டாறுகள் சூழ்ந்த அகன்ற பெரிய பகைவர்க்குரிய குறுங்காட்டில், சேய்மைக் கண்ணும், சென்று மனம் நாறும் பிடவம் முதலான பல்வேறு செடிகளால் ஆன துாறுகள் பலவற்றை அழித் துத் கட்டப் பெற்றுள்ள, வேட்டுவப் படை வீரர்களின் இருக்கையாம் சிறு சிறு வாயில்களைக் கொண்ட, அப்பகையரசர்களின் சிற்றரண்கள் பலவற்றை அழித்துவிட்டு, அக்காட் டிடத்தில், தன் நாற்படை இருக்க, காட்டில் உள்ள முட்செடிகளை நாற்புறமும் நட்டு ஆக்கிய மதிலைக் காவல் மிகும்படி வளைத்துக்கொண்ட, அதன் நடுவே, அமைந்த பரந்து அகன்ற பாசறைக்கண், தழையால் வேயப்பட்ட கூரைகளைக் கொண்ட குடில்கள், வரிசை வரிசையாக ஒழுங்கு பட அமைக்கப் பெற்ற தெருக்களின், நாற்சந்திகளில், காவலாக காவலாக, நிறுத்தப் பட்டிருந்த, மத நீர் விளையும் கதுப்பினையும், சிறு கண்களையும் உடைய யானை, தனக்கு உணவாக, தன் முன்னே போடப் பட்டிருக்கும், ஓங்கி வளர்ந்து வளம்பெற்ற கரும்பு, நெற் கதிர்களோடு நெருங்கிக் கலந்து கட்டப் பெற்ற, அந் நெல் வயலிலேயே வளர்ந்து கிடந்த காவி. இனிய அதிமதுரத்தழை, ஆகிய இவற்றில் எதையும். உண்ணாது, மாறாக, அவற்றை எடுத்துத் தன் நெற்றியைத் துடைத்துக் கொண்டும், கூரிய முனையினை உடைய தந்தங்கள்மேல், தம் துதிக்கைகளை மடித்துப்போட்டுக் கொண்டும் நிற்க, உணவுண்ண மறுத்த நிற்கும் அவ் யானைகளை