பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7拿 முல்லைப் பாட்டு

திருமாலைப்போல, அலைகள் ஒயாது எழும், குளிர்ந்த கடலில் நீர்குடித்து. எழுந்து, மலையுச்சிகளைக் குறியாகக் கொண்டு வலமாக எழுந்து, விரைந்து ஓடும். கார்மேகக் கூட்டம், பெரிய மழையைப் பெய்து ஒய்ந்த, தனித்து இருக்கும் மகளிரை வருத்தும், புன்மையும், சிறுமையும் வாய்ந்த மாலைக் காலத்தில், பெருமைக்குரிய குடும்பத்தில் வந்த முதுபெரும பெண்டீர் சிலர், அரிய காடிவல் நலமும், நளிமிகப் பழமை வாய்ந்தது என்ற பெருமையும் வாய்ந்த, தங்கள் மூதூரின் புறநகர்க்குச் சென்று, நாழி யில் கொண்டு சென்ற நெல்லோடு, யாழ் இ சைபோல் இனிமையாக ரீங்காரம் செய்யும் நல்ல இனத்தைச் சேர்ந்த வண்டுக் கூட்டம், மலர்ந்ததும் தேன் உண்ணும் வேட்கையால் ஒன்று திரண்டு வந்து மொய்க்க, அரும்புகள் மலர்களாக மலர்ந்த நறுமணம் விசும் முல்லை மலர்களைத் தூவி, கைகூப்பி வணங்கி, நற்சொல் கேட்டு நின்றனர் : அந்நிலையில், சிறிய கயிற்றால் கட்டப் பட்ட, இளம் பசுங்கன்றின் தாய்ப்பசு பிரிவினால் தேர்ந்த மிக்க துயரினால், நிலையின்றித் தவிப்பதைப் பார்த்த, அம்மனைக்கு உரிய ஆயர் மகள், குளிரால் நடுங்கும் தன்தோளைத், தன் இரு கைகளாலும் அனைத்துக்கொண்டவாறே வந்து, 'தம் கையில் கோல் கொண்டிருக்கும் ஆயர், பின்னால் இருந்து துரத்திவர, உன்னுடைய தாய்ப்பசு இப்போதே வந்துவிடும்' எனக் கூறிக் கன்றிற்கு அமைதி கூறி நின்றாள்.

நற்சொல்கேட்க வந்த முதுமகட்கு ஆய்மகள், 'இப்போதே வந்துவிடும்" என்ற சொல் மிகவும் நல்ல சொல்லாகப் படவே, விரைந்து வீடடைந்து, பிரிவுத்துயரால் வருந்திக்கிடக்கும் இளமகளாம் அரச மாதேவி பால் சென்று, "வருவர்' என ஆய்மகள் கூறிய சொல், நல்ல, விரிச்சியாம்; ஆகவே, பகை நாட்டு மண்ணை வெற்றிகொண்டு, அப்பகையரசர்கள் பணிந்து வந்து திறை கொடுக்க, அவற்றையும் கைக்கொண்டு, நம் தலைவராம் அரசர் வருவது உறுதி ; ஆகவே, கரிய