பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலத்தவர்களும், நிகழ்ச்சிகளும்

இதுவரை, முல்லை நிலத்து ஆயர், ஆய்ச்சியர், தலைவியாம் அரசமாதேவி, அவளைப் பேணி வளர்க்கும் செவிலி, தலைவனாம் அரசன், அவன் காட்டுப் பாசறை, அவன் நாற்படை, அந்நாற்படை புள் ஒன்றான யானைகள், அவற்றை ஏவல் கொள்ளும் பாகர் தேர், அதில் பூட்டப் பெறும் குதிரை, தேரோட்டி: பாசறையுள் அரசன் இருக்கும் தனி அறை, அவ்வறையுள், அரசனைக் காத்து நிற்கும் மெய்க்காப்பாளர், வேல் பணிபுரியும் ஊம்ை மீலே ச் சர் அவ்வளவுக்குள் விளக்கேற்றி நிற்கும் மகளிர், அந்நாட்டு, ஆற்றங்கரையில் தவம் மேற்கொண்டிருக்கும் அந்தணர், ஆகியோர் இயல்புகளைத், கார்காலத்து மாலைமமை என்ற தல்ைப் பின் கீழ், தனித்தனியே வைத்துப் பார்த்தோம்.

இனி, இவர்கள் எல்லோரும், தத்தம் பணிகளைத் தனித்தனி ஆற்ற, அவர்களிடையே நடைபெற்ற தொடர்பான நிகழ்ச்சிகளைத் தொடுத்துக் கான முயற்சிப்பாம். அக்காட்சி நலம், முல்லைப்பாட்டின் மூலத்தைத் தனித்தனியாக நிறுத்தி, அதற்குத் தரப் பட்டிருக்கும் பெர்ருள் விளக்கங்களை, நிரலே வரின்சப் படுத்தித் தந்தால். முல்லை நிலத்தவர்தம் வாழ்க்கைப் படக்காட்சி, இடையிறவுபடாது தொடர்ந்தே காட்டப் படும். அது செய்வாம். இனி. - - -

அகன்ற பெருநிலப் பரப்பை உடைய உலகத்தை, வளைத்துக் கொண்டு, சக்கரப் படையோடு, வலம்புரிச் கங்கையும் ஏந்திய, திருமால், ஆனிரைகாக்கும் பெருமை மிக்க் தன்கைகளில், மூன்றடிமண் கொடுத்ததை உறுதி செய்ய, மாவலி மன்னன், தன் கையில் வார்த்த தண்ணிர் வழிய, அக்கணமே, வானளாவ உயர்ந்து விட்ட