பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலத்தவர்களும் நிகழ்ச்சிகளும் 8 1

பகைப்படை வீரர்கள் ஏவிய, கூரிய முனையினையுடைய அம்புகள். உடலுக்குக் காவலாகப் போர்த்து விடப்பட்ட

தோல் பரிசினையும் துளைத் துவிட்டு, உடலுள் ஆழமாக அழுந்தி விட்டமையால், புல் உண்ணு வ ைதயும் வெறுத்துவிட்டு, செவி சாய்த்து

வீழ்ந்துகிடக்கும் குதிரைப் படைகளைச் சிந்தித்தும், கவலை மிகுதியால், ஒரு கையைப் பள்ளியில் ஊன்றிக் கொண்டு, ஒருகை முடியொடு, கைக்கடகமும் சேருமாறு, தலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, சென்ற நாள் போர் நிகழ்ச்சிகளையும், நாளை நடத்த இருக்கும் போர்த்திட்டங்களையும் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்து விட்டமையால், பகைவர்கள் மீது, எவ, தேர்ந்தெடுத்த படைக்கலன்களைக் கொண்ட, தன் வெற்றிக் கையின் வலிய விரல் முனைகளால், எக்காலத்தும், எப்போர்க் களத்தும் தனக்குப் புகழையே சேர்க்கும், புகழ் வாய்ந்த வஞ்சின மாலையாம், தன் தலை மாலையை, நாளை நடைபெறப் போகும் போரிலும், அப்புகழே நிலைக்கத் துணை நிற்பாயாக எனக் கூறுவான் போல், திருத்தி அணிந்து கொண்டு, பகையரசர்கள், தத்தம் அரனகத்தே இருந்தனராயினும், இவனால், நமக்கு எந்நேரத்தில் தோல்வி கிட்டிவிடுமோ என அஞ்சுதற்குக் காரணமாய், தன் வெற்றி முரசு முழங்கும் அப்பாசறையில், நேற்றைய வெற்றிகண்ட மன நிறைவாலும், நாளைய போரில், எப்படியும் வெற்றியே பெற்றுவிடுவோம் என்ற மன உறுதிப் பாட்டாலும் சிறிதே இன்துயில் கொண்டான். -

காட்டுப் பாசறைக்கண், காவலன் நிலை இதுவாக, அரண்மனையில், அரசமாதேவி, கணவன் வருகையைக் காணாக் காரணத்தால், துன்பம் உற்று, தன் நெஞ்சை அரசன்பால் போகவிடுத்து விட்டு, தனிமையால் நேர்ந்த வருத்தத்தோடு, நாடு, வீடு நலம் கருதிக், காதலன் பிரிய வேண்டிய அவன் கடமையையும், அவன், அத்தகு நல்ல கடமைகளை நிறைவேற்றுவான் வேண்டி,

மு.-6