பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 முல்லைப்பாட்டு

பிரிந்தவழி, ஆற்றியிருக்க வேண்டிய தன் கற்பின் கடமையையும் பலகால் எண்ணிப் பார்த்து, தன்னைத் தேற்றிக் கொண்டும், தன் துயரத்தையும் அத்துயரால் தன் உடல் மெலிந்து விட்ட நிலைமையும் காணும் அவ்வூரார், அது கொண்டு, தன் கணவனைப் பழிக்க விடாது காக்க வேண்டுவது தன் கடமை என்பதால், தன் உடல் தளர்ச்சி, அவர்களுக்குப் புலப்படாவாறு, தான்் மெலிந்து விட்டமையால், தாமே கழன்று விழும் தன் கைவளையல்களை, மேலும் முன் கையில் ஏற்றி இறுகச் செறித்தும், மறுபடியும் காதல் உணர்வு மிக வே மீண்டும் மயங்கியும், பெருமூச்சு எறிந்தும், அம்பேறுண்ட மயில்போல் ஒடுங்கிக் கிடந்தாள்.

அரசமாதேவியின் நிலை இதுவாக, 'கிழவி நிலையே வினை இடத்து உரையார்: வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும்’ (தொ. பொ. கற்பு : 45) என்ற விதிக்கு ஏற்ப, காட்டுப் பாசறைக்கண்ணதான், தனி அறையில் சிறிதே கண்ணயர்ந்திருந்த, அரசனுக்கு, காதலி நினைவு வந்துற்றது: அவ்வளவே, பகையரசர்கள் விரும்பும் அவர் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்ட, ஒன்று திரண்டிருந்த பெரிய படையோடு, வெற்றி கொண்டு உயர்த்தப்பட்ட, வெற்றிக் கொடி ஏற்றப் பெற்று, பெற்ற வெற்றிக்குப் புகழ்பாடும் கொம்பும் சங்கும் முழங்க புறப்பட்டு, நுண்மணலிடத்தே வேர் விட்டிருக்கும். அடர்ந்த இலைகளைக் கொண்ட காயா, அஞ்சன வண்ண மலர்களை மலர்த்தவும், இளம் தவிர் களையும் மலர்கொத்துக்களையும் உடைய கொன்றை, பொன்போலும் நிறம் வாய்ந்த நல்ல மலர்களைச் சொரியவும், வெண்காந்தள்கள், மலரும் பருவம் பெற்றுக் குவிந்து கிடக்கும் தம் பேரரும்புகளை, அழகிய உள்ளங்கைடோல் மலர்த்தவும், இதழ்கள் செறிந்த தோன்றி, செங்குருதி நிறம் வாய்ந்த மலர்களைப் பூப்பவும், காடுகள் செழித்துக் கிடக்க, அக்காட்டின் ஊடே செல்லும், செம்மண் பரவிய பெரு