பக்கம்:முல்லை (முல்லைப்பாட்டு விளக்கம்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லை நிலத்தவர்களும் நிகழ்ச்சிகளும் 83

வழியில், தான்் வேண்டும் மழையை, வேண்டும் காலத்தில், வேண்டும் அளவே பெற்ற காரணத்தால், பால் ஏறப் பெற்று, முற்றிய மணிகளைக் கொண்ட கதிர்களின் பாரம் தாங்க மாட்டாது தலை சாய்ந்து கிடக்கும் வரகுக் கதிர்கள் விளைந்து கிடக்கும் கொல்லைகளில், முறுக்குண்ட கொம்புகளையுடைய கலைமான்களோடு, மடப்பம் பொருந்திய பெண்மான் கூட்டங்கள், துள்ளித் துள்ளி ஆடித் திளைக்க, மேலும் பெய்தற்கு விரைத் ஒடும் வெண்முகி ற் கூட்டம், மழை பெய்யும் ஆவணித் திங்களில், முற்றி முதிர்ந்த பல்வேறு காய்களைக் கொண்ட, வள்ளியம் காடு என்ற பெயர் பூண்ட காடு, பின்னால் நிற்கும்படி, இயல்பாகவே விரைந்து ஒடவல்ல து திரையை, மேலும் விரைந்து ஒடப்பண்ணுவான் வேண்டி, வழிப்பயணம் உடைய வரா ப் வந்த அரசனுடைய போர்க் களத்தில் தன் திறம் எல்லாம் விளங்குமாறு போரிட்ட நெடிய தேரில் ஆட்டிய குதிரைகள், அரண்மனையகத்தே, மயங்கிக் கிடக்கும் அரச மாதேவியின் அழகிய காதுகள், இன்ப வெள்ளத்தால் நிரம்பும்படி குரல் எழுப்பி ஆரவாரித்தன.

'முல்லை நிலத்தவர்களும், நிகழ்ச்சிகளும்' என்ற தலைப்பின் கீழ, இதே தலைப்புள்ள, முந்தைய அதிகாரத்தில், 1) கார்காலத்து மாமழை [1.6]; 2) நற்சொல் கேட்கும் மகளிர் (7.11, 3) ஆயர் மகன் ஆறுதல் உரை (12-15) 4) பெருமுது பெண்டிர் ஆறுதல் உரையும் அவள் நிலையும் (17-23) 5) பாசறை அமைப்பு F24.421 6) பாசறைக்கண் அரசன் தனி இருக்கை 143-491 7) மெய்காப்பாளர், (50-54, 8) நாழிகைக் கணக்கர் (55-58) 9) யவனர், மிலேச்சர் (59-6 :) 10) பாசறைக் கண் அரசன் நிலை. 167-80) 11) தலைநகர் ம்ாளிகையில் அரச மாதேவி நிலை. (80-88) 12) அரசன் வினை முடித்து வீடு வந்து சேர்ந்தது (39-108), ஆகியோ நிலைகளைத் தனித்தனித் தலைப்பின் கீழ் விளக்இ