பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

99

அரபுத் தாயகத்தின் தென்கோடியில் மலர்ந்த இசுலாம். வடக்கில் பாலத்தீனம், ஸிரியா, பைஜான்டைன், ஆகிய நாடுகளில் விரைவாகப் பரவியதுடன் மத்திய தரைக்கடலின் மேற்குப் பகுதியான ஸ்பெயினிலும் பரவியது. அப்பொழுது ஸ்பெயின் நாடு, "அல் அந்தலூஸ்", "அந்தலூஷியா" என அரபு மொழியில் வழங்கப்பட்டது. சிலுவைப்போர்கள், கிறித்தவ குருமார்களது இடைவிடாத பொய்ப்பிரச்சாரம், இசுலாமிய தலைமை பீடத்தில் நிலவிய ஊழல்கள், ஒழுக்கக்கேடுகள் ஆகியவை காரணமாக, அட்லாண்டிக் மாகடலையொட்டிய ஸ்பெயின் நாட்டின் சிறு பகுதி மீண்டும் கிறித்தவ சமயப்பிடிக்குள் சென்றது. இசுலாமியருக்கு எதிராக கலவரத்தை முன் நின்று நடத்திய ஜான் என்பவன் புதிய போர்ச்சுகல் நாட்டை அமைத்து அந்த நாட்டின் அதிபரானான். அவனுடைய மகன் ஹென்றி, புதிய நாட்டை வலுவும் சிறப்பு மிக்கதாக ஆக்க வேண்டும் என்ற ஆசையினால் அல்லும் பகலும் சிந்தித்து வந்தான். அவன் கண்ட முடிவு அன்றைய ஐரோப்பிய சமுதாயத்தில் புகழும் பொலிவும் பெற்றுத் திகழ்ந்த இசுலாமியரது வாணிபச் செல்வாக்கை அழிக்க பாடுபட வேண்டும் என்பது.

அன்றைய நிலையில், இந்து மாக்கடல், பாரசீக வளைகுடா கடல், செங்கடல், மத்யதரைக்கடல் ஆகிய அனைத்து நீர்வழிகளும் இசுலாமியரது வாணிப வளர்ச்சிக்கு உதவும் ஏகபோக பகுதிகளாக இருந்தன.[1] கீழை நாட்டுப் பொருட்களுடன் அவர்களது பொருட்களையும், கப்பல், ஒட்டகம், மூலமாக வெனிஸ் நகரத்தில் நிறைத்தனர். அங்கிருந்து அவை ஐரோப்பிய கண்டம் முழுவதும் வினியோகிக்கப்பட்டன. இசுலாமியர் இதனால் பெருத்த ஆதாயம் அடைந்து வந்தனர். ஆதலால், அவர்களது வாணிபச் செல்வாக்கை அழிப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய நீர்வழிக்கு மாற்று வழியொன்றைக் கண்டுபிடிக்க ஹென்றி முயற்சித்தான். காகரி என்ற இடத்தில் இதற்கான ஆய்வுக்கூடம் ஒன்றையும் அமைத்தான். அவனது உழைப்பு, ஊக்குவிப்பு காரணமாக போர்ச்சுகல் நாட்டு மாலுமிகள், அலைகடலுக்கு அப்பால் போர்டோ, காண்டோ தீவுகள் (கி.பி. 1419) மதீரியா (கி.பி. 1420) கானரி, அஜோர்தீவுகள் (கி.பி. 1431) பிரான்கோ


  1. Fr. Pereira - History of Ceylon - page. II