பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

தாமிரிகா என வழங்கினர். தமிழகத்தின் முக்கிய கடற்துறைகளான முசிறி, குமரி, கொற்கை, தொண்டி, புகார், புதுகை, ஆகிய பட்டினங்களையும் கோவை, உறையூர், மதுரை, அழகன் குளம் ஆகிய பட்டணங்களையும் அவர் நன்கு அறிந்து இருந்தனர். இந்தப் பெருநகர்களில் அவர்களது குடியிருப்புகளும் நிறுவப்பட்டு இருந்தன. இந்த நகரங்களில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான உரோம நாணயங்களும், அண்மையில் அரிக்காமேட்டில் அகழ்ந்து எடுக்கப்பட்ட அரிய பண்டங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன.

நமது பழந்தமிழ் நூற்களான சங்க இலக்கியங்கள் உரோமர்களை யவனர், எனக்குறிப்பிடுகின்றன. அவர்களது நாடும் யவனம் என்ற பொதுச்சொல்லினால் வழங்கப்பட்டது. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம்-வாழ்த்துக் காதை “வன்சொல் யவனர் வளநாடு” எனக் குறிப்பிடுகிறது.[1] தமிழ், வழங்கும் பதினேழு நிலங்களில், யவனமும் ஒன்று என அன்று கருதப்பட்டு வந்தது. விஷ்ணுபுராணம், மாளவி காக்கினி மித்திரம் ஆகிய ஸ்மஸ்கிருத இலக்கியங்கள், யவனம், இந்திய நாட்டின் மேற்கு எல்லையில் அமர்ந்திருந்ததாகவும், யவனர்கள் அந்தப் பிராந்தியத்தில் இருந்த பூர்வகுடிகள் எனவும் குறிப்பிட்டுள்ளன. ஏனைய வடமொழி இலக்கியங்களும், யவனர்களை, ஆரியரல்லாத இனத்தினராக, இந்து சமயத்தினின்றும் மாறுபட்டவர்களாக, அந்நியர்களாக, பாரசீகர்களாக, சகரர்களாக, கிரேக்கர்களாக, வர்ணித்துள்ளன. உறிப்ரூ சொல்லான “யோனா” “யோன்” ஆகியவைகளின் ஒன்றின் அடிப்படையில் இருந்து யவன என்ற சொல் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளது.[2] மேலும், பிராகிருதச் சொல்லான லவன (உப்பு என்ற பொருள்) என்ற மூலத்தினின்றும் மாறுபட்டு இந்தச் சொல் உருவாகி இருக்கலாம் என்பது சில மொழி வல்லுநர் முடிவு.

கி.மு.250-240ஐச் சேர்ந்த அசோகனது புத்த போதனைகளைத் தாங்கிய தூண்களில் “யோனா” என்ற பாலிமொழிச்


  1. சிலப்பதிகாரம் - வாழ்த்துக்காதை - பாடல் எண் 26
  2. Hunter. W.W. – History of Orissa P. 72.)