பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

அது கடற்கரையில் உள்ள பெரிய அழகிய நகரம். சிறப்பாக குறிப்பிடத்தக்க கப்பல் துறையும் அங்கு இருந்தது. உறுதியான தூண்களைக் கொண்டு மரத்தாலான பெரிய தளம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டு இருந்தது. அதனை அடைவதற்கான வழியும், மூடுபாதையும் முழுவதும் மரத்தினால் அமைக்கப்பட்டு இருந்தது. எதிரிகளது தாக்குதல் ஏற்பட்டால் துறைமுகத்தில் உள்ள கப்பல்கள் அனைத்தும் இந்தத் தளத்துடன் பிணைக்கப்பட்டுவிடும். வீரர்களும் வில்லாளிகளும் இந்தத் தளத்திற்கு சென்று விடுவார்கள். இதனால் எதிரிகள் இவர்களைத் தாக்கி காயங்கள் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போய்விடும் ... ... ... இந்த நகரில் ஒரு அழகிய தொழுகைப் பள்ளி இருக்கிறது. கல்லினால் அமைக்கப்பட்டது. கொடிமுந்திரியும் மாதுளையும் ஏராளமான அளவில் கிடைக்கின்றன. இறைநேசர் ஷேக் முகம்மது அல் கிபுறியை அங்கே சந்தித்தேன். தோளில் சரிந்து படியும் அளவு நீண்ட தலைமுடியினையுடைய பக்கீர் ஒருவரும் அவருடன் இருந்தார். அவர் வெளியுணர்வு இல்லாத தியான நிலையில் இருந்தார் சிங்கம் ஒன்றை வளர்த்து பழக்கப்படுத்தி வைத்து இருந்தார். அதுவும் பக்கீருடன் அமர்ந்து உண்டது. முப்பதுக்கும் அதிகமான பக்கீர்கள் அந்த இறைநேசருடன் இருந்தனர். அவர்களில் ஒருவர் புள்ளிமான் ஒன்றை வைத்து இருந்தார். அதுவும் அங்கேயே இருந்தது. அந்தச் சிங்கத்தின் குருளையினால் புள்ளிமானுக்கு எந்த தொந்தரவும் இல்லை. நானும் அந்தப் பட்டணத்தில் தங்கினேன்.

"இதற்கிடையில் யோகி ஒருவர், சுல்தானது வீரியத்தை அதிகரிக்க மாத்திரைகள் தயாரித்தார். அதில் இரும்பு தாதுக்கள் அதிகமாகச் சேர்க்கப்பட்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. சுல்தான் கூடுதல் அளவில் அவைகளை உட்கொண்டதால் அவருக்கு உடல் நலிவு ஏற்பட்டது. அந்த நிலையில் அவர் பட்டினத்தை அடைந்தார். நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கு எனது அன்பளிப்பையும் கொடுத்தேன். அங்கு தங்கி இருந்த பொழுது, அவர் கடற்படை தளபதி குவாஜா கருணை வரவழைத்து “மாலத்தீவு பயணத்திற்கான கப்பல்களை ஆயத்தப்படுத்துங்கள், கூடுதலாக ஒன்றும் வேண்டாம்” என உத்திரவிட்டார். நான் வழங்கிய அன்பளிப்பிற்கான பெறுமானத்தை வேறு அன்பளிப்பாகக் கொடுக்க முனைந்தார், நான் மறுத்துவிட்டேன் ... ... சுல்தான் பட்டினத்தில் பதினைந்து நாட்கள் தங்கி