பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வல்லப தேவர், வீரபாண்டிய தேவர், சுந்தரபாண்டிய தேவர், மாறவர்மன் சுந்தர பாண்டிய தேவர், சடையவர்மன் குலசேகரன் ஆகியவர்களது கல்வெட்டுக்களும் இந்த உண்மையை உணர்த்துகின்றன.[1] இன்னும், தென் பாண்டிச் சீமையைச் சேர்ந்த அருப்புக்கோட்டை, சுத்தமல்லி, ஆகிய ஊர்களில் உள்ள பதின் மூன்றாவது நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டுக்கள் திர்கத்தைக் குறிப்பிடுகின்றன. அருப்புக்கோட்டை ஆலயமொன்றின் அறங்காவலர்கள் நிலக்கிரையத்தை நெல்லாகவும் திரமமாகவும் பெற்றதாகச் செய்தி உள்ளது.[2] சுத்தமல்லி என்ற ஊருக்கு அண்மையில் உள்ள குலசேகரப் பேரேரியை ஆழப்படுத்தி செம்மை செய்ய கி பி. 1204ல் பாண்டியன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் 100 திரம்மாக்கள் வழங்கியதை அந்த ஊர் கல்வெட்டு சுட்டுகிறது.[3] மேலும், மாறவர்மன் விக்கிரம பாண்டியன், திருபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டியன், ஆகியோர் ஆட்சியின் அரசிறையாக செலுத்த வேண்டிய தொகை இவ்வளவு திரமம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பதினாறு மாநிலத்தில் விளைவிக்கப்பட்டுள்ள வரகு, தினை, ஆகிய பயிர்களுக்கு ஒரு திரம்மமும் இதர புஞ்சை பயிர்களுக்கு அரை திரம்மமும் வரியாகச் செலுத்தப்படவேண்டும். என நிகுதி செய்யப் பட்டிருந்தது.[4] மற்றும், மாறவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சிக்காலத்தில் "எள், வரகு, தினை, புளிங்கு விளைந்த நிலத்தின்" மாத்தால் திரமம் ஒன்றேகால் இறுப்பதாக அந்தராயம் வசூலிக்கும் ஆணையை மேலக்கொடுமலூர் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.[5] அந்த அரசரது ஆட்சியின் (கி.பி. 1215ல்) அஞ்சு மேனி திரம்மம் என்ற பிறிதொரு அரபு நாணயமும் தமிழ் மக்களிடையில் செலாவணியில் இருந்தது தெரியவருகிறது.[6] பாண்டிய நாட்டில் அரபிகளது குடி


  1. Pudukottai state inscriptions No. 260, 262. 292. 265, 269, 305, 306, 307, 308, 328,
  2. AR 412/1914 - Aruppukottai
  3. AR 459/1914 - Aruppukottai
  4. AR 399/1907 - Suddhamalli
  5. AR 399/1907 - Melakodumaloor
  6. Appadurai Dr. A– Econamic Contions of S. India (From 1000 HD – 1500 AD) vol II.