பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

வேறு இன, நாட்டு மக்களைப் போல் அல்லாமல் குறிப்பாக கிரேக்கர், உரோமர், சீனர், பாரசீகத்தினரைப் போல் அல்லாமல், கொண்டு வந்த பொருட்களை விற்றுவிட்டு, தங்கள் தேவைக்கு ஏற்ற இந்த நாட்டுப் பொருட்களை வாங்கிச் செல்வதுடன் அமையாமல் — இந்த நாட்டின் அரசியல், சமுதாய வாழ்வில் ஊடுருவி, தமிழ்நாட்டின், இணையற்ற பாரம்பரியத்திற்குரிய தமிழ் மக்களாகவே மாறியவர்கள், அரபியர்களைத் தவிர வேறு எந்த மேற்கு நாட்டினரும் அல்ல என்பதே வரலாறு வழங்கும் தெளிவான செய்தியாகும்.

ஆதலால், அந்த அரபியர்களை–தமிழக இஸ்லாமியராகிய அவர்களது தொன்மையை, தமிழக இலக்கியங்கள், தமிழக கல்வெட்டுக்கள், செப்பேடுகள் வெளிநாட்டுப் பயணிகளது பயணக் குறிப்புகள் ஆகிய வரலாற்றுத் தடயங்களின் வாயிலாகத் தொகுத்து அறிதல் அவசியமாகிறது.