பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழர் முன்னோர் காலத்துச் சோழர் போலவே கருதப்பட்டனர். ஆனால், முன்னூல்களும் சாஸனங்களும் கண்டு பிடிக்கப்பட்டு வெளிவரத் தொடங்கிய பின், அவற்றின் ஆராய்ச்சி பெருக, இச்சோழருள் பலருடைய வரலாறுகள் உண்மையானவை என்றே அறிஞர்களால் கருதப்பட லாயின. சங்ககாலத்துச் சோழர்களாகப் பண்டைத் தமிழ் நூல்களால் அறியப்படுவோர் பலர். இவர்களுள் பெரும்புகழ் படைத்தவர் சிலரே. கரிகாற்சோழன், கோச்செங்கணான், கிள்ளிவளவன் போன்றவர்கள் முதன்மையானவர்கள். இவர்களுக்குள் முன்னவனான கரிகாலன், கரிகாற் பெருவளத்தான் எனவும், திருமா வளவன் எனவும் வழங்கப்படுவான். தன் தந்தை இறந்ததும், நாட்டில் அரசுரிமைபற்றி நேர்ந்த பெருங் குழப்பத்தில், பிள்ளைப் பருவத்தனான இக்கரிகாலனைப் பகைவர்கள் சிறைப்படுத்தியதோடு,அச்சிறையில் தீயும் இட்டனர். அதிலிருந்து இவன் தப்பியோடிய போது காலொன்று அத்தீயால் கரிந்துவிட்டது. இக் காரணத்தால் கரிகாலன் என்னும் பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. இவ்வாறு இவன் சிறையினின்றும் தப்பி, ஐந்து பிராயத்தில் முடிசூடித் தன் இளமைப் பருவத்திலேயே பகைவரை யெல்லாம் வென்று ஆட்சி புரிந்தான். அக்காலத்தில், இவனுக்குப் பேருதவி புரிந்தவர் இவன் மாமனாகிய இரும்பிடர்த் தலையார் என்னும் பெரும்புலவர். ஆண்டில் இளையனாய் இருந்தும் அறிவில் முதியவனாய் நீதிவழுவாது ஆண்ட இவனது செங்கோற் சிறப்பால் தமிழகம் பலவகையிலும் செழிக்க லாயிற்று. இவனது அரிய செயல்களுள் காவிரிக்குக் கரைகட்டிச் சோழநாட்டை வளப்படுத்தியதும், தொண்டை நாட்டில் வேளாண் மக்களைக் குடியேற்றி யதும், காஞ்சிமா நகரையும் காவிரிப்பூம் பட்டினத்