உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 மூன்றாம் குலோத்துங்க சோழன் தமிழ் நூல்களிலும், அன்பில், திருவாலங்காடு, கன்யாகுமரி முதலிய இடங்களில் அகப்பட்ட சிலா தாமிர சாஸனங்களிலும் இம்முன்னோர்களின் வமிசா வளியும் வரலாறுகளும் சுருங்கக் கூறப்பட்டுள்ளன. இவருள், மனு சிபிகளின் சரித்திரங்களைப் புராணங்களி லன்றிச் சங்க நூல்களிலும் காணலாம். பசுவின் கன்றைக் கொன்ற பழிக்காகத் தன் ஒரு மகனையே தேர்க்காலிலிட்டு முறை செய்த மனுவின் கதையும், புறாவின் துக்கம் நீங்கத் தன்னுடலையே அரிந்து வைத்துத் துலையே றிய சிபியின் கதையும் பிரசித்த மானவை. இவரன்றிப் புகார் நகரில் இந்திரவிழா வெடுத்த முசுகுந்தன் வரலாறும், ஆகாயத்தில் பறந்து உலகத்துக்குத் துன்பம் விளைவித்துவந்த அசுரர்களின் கோட்டைகளை அழித்த சோழன் ஒருவன் செய்தியும், பரசுராமன் காலத்தில் புகார் நகரிலிருந்து அரசாண்ட காந்தமன் சரித்திரமும் சிலப்பதிகாரம் மணிமேகலை களிற் கூறப்படுகின்றன. பண்டைக்காலத்தே இவர் களைப் போலப் பிரபலரான சோழர்கள் வேறு சிலரும் உளர். இவர்கள் வரலாறுகள் இங்கு விரிப்பிற் பெருகும். 2. சங்ககாலத்துச் சோழர் :- இனி, பண்டைச் சோழரின் சரித்திரங்களிலே, மனித ஆற்றலுக்கு மேற் பட்டனவாகக் காணப்படுஞ் செய்திகள் பல உள்ளன. அவைகளுள், சரித்திர உண்மைகளாக இக்காலத்து அறிஞராற் கொள்ளப்படுவன சிலவே. ஆனால், முதற் காலத்துச் சோழர்க்குப் பல நூற்றாண்டுகளின் பின்னர் வாழ்ந்த சோழர்களின் வரலாறுகள் பழைய இலக்கியங் களிலிருந்து தெரியவருகின்றன. இவர்களே சங்க காலத்தில் விளங்கிய சோழ மன்னர்கள். ஏறக்குறைய ஐம்பது வருஷங்களுக்கு முன் இவர்களும் புராண