பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழர் முன்னோர் என்று, இவ்வாறு முன்னோரும் பின்னோரும் புகழ்ந் துள்ள நாட்டுச்சிறப்பெல்லாம் இக் காவிரியின் மாட்சி யால் உண்டானதே. காந்தமன் என்னுஞ் சோழன் வேண்ட, அமர முனிவன் அகத்தியன் தனாது, கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை' யைக் கங்கா தேவியிடம் சென்று வாங்கிவந்து அம்முனிவர் தென்னாட்டில் பெருக விட்டார் என்பது புராண வரலாறு. இதனால், கங்கைப் பேராற்றின் புனிதமும் பெருமையும் உடையது காவிரிப் பேராறு என்பது தெளியலாகும். பொன் போன்ற வண்டலொடு கூடிய காவிரி நீர்வளத்தால் அழகும் செல்வமும் அறிவும் பொங்கி இன்றுவரையும் நின்று செழித்து வருகின்றது சோழவளநாடு. இந்நாட்டை அநாதிகாலமாக ஆண்டுவந்த சோழவேந்தர் எண்ணிறந் தவர்கள். இவ்வேந்தர்களைச் சங்க காலத்துக்கு முற் பட்ட சோழர், சங்க காலத்துச் சோழர், பிற்காலத்துச் சோழர் என்று மூன்று வகையினராகப் பிரிக்கலாம். அத்தியாயம் 2 சோழர் முன்னோர் 1. சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர் :- நம் பரதகண்டத்து அரசர்கள் சோம குலம், சூரிய குலம், அக்கினி குலம் என்னும் மூன்று மரபுகளுள் ஒன்றுக்கு உரியவராகப் பெரும்பாலும் கூறப்படுவர். அம்முறை யில், சோழ வேந்தர் சூரிய குலத்தைச் சேர்ந்தவராவர். பாண்டியர் சந்திரகுலத்தவராகவும் சேரர் அக்கினி குலத்தவராகவும் கூறப்படுகின்றனர். சூரிய குலத்து ஆதிவேந்தர்களான மனு, இக்ஷ்வாகு, மாந்தாதா, சிபி, முசுகுந்தன் முதலியோரே இச்சோழர்க்கும் குலமுன் னோர்கள். கலிங்கத்துப்பரணி, மூவருலா முதலிய