________________
96 மூன்றாம் குலோத்துங்க சோழன் நம் சோழன் சிறுபிராயமுதலே குதிரையேற்றம் யானையேற்றம் முதலிய போர்ப் பயிற்சிகளிலும், வேட்டையாடுதல் நீர்விளையாட்டு முதலியவற்றிலும் விருப்ப முடையவன் என்று தெரிகின்றது. ' வாசி நகுலன் ' பரிவீரன்' என்று இவனைப் புகழ்வர் கோவை நூலார். மதுராவிஜயத்தின் பின் அந் நகர்ப் பக்கங்களில், 'வெஞ்சிலை வாங்கி வேட்டையாடி நீர்விளையாடி ஓடைமதக் களிறேறி ஆடல்வாம் பரிகடவித் தண்டளவ மலர்மாலையில் வண்டாடச் செண்டாடி மகிழ்ந்தான் என்று கூறுகின்றது இவனது மெய்க் கீர்த்தி. மகிழ்ச்சிக் காலங்களில் அரசர் முதலியோர் இத்தகைய விளையாட்டுக்கள் புரிதல் பண்டை வழக்கமே. சேரமான் பெருமாள் நாயனாரும் சுந்திரமூர்த்திகளும், செண்டாடுந் தொழின் மகிழ்வும் சிறுசோற்றுப் பெருஞ்சிறப்பும் வண்டாடு மலர் வாவி மருவிய நீர் விளையாட்டும் (பெரியபுராண. சேரமான். 155) புரிந்தனர் என்றும், நிலைச்செண்டும் பரிச்செண்டும் வீசி மிக மகிழ்வெய்தினர் என்றும் சேக்கிழார் பாடு தலும், 'வாலுளைப் புரவியற் பொருவில் செண்டாடி என்று கம்பர் கூறுதலும் (கம்ப ராமா. நகரம். 68) இங்கே ஒப்பிடத்தக்கன. கி. பி. 1178-ல் எழுதிய சீன ஆசிரியரொருவர் சோழநாட்டையும் அதன் படைநிலையையும் பற்றிக் கூறு வதாவது : இத்தேசம் மேற்கு நாடுகளுடன் பகைகொண் டுள்ளது. அரசாங்கத்தில் 60,000 யானைகளடங்கிய