உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குணாதிசயங்கள் 97 ஒரு மாபெரும்படை உளது. ஒவ்வொரு யானையும் 7, 8 அடி உயரம் உடையது. போரிடுஞ் சமயத்தில் இவ் யானைகளின் முதுகின் மேல் உள்ள அம்பாரிகளில் வீரர் கள் அநேகர் செல்கின்றனர் ; இவ்வீரர்கள் கையில் ஈட்டி யேந்தி யுத்தம் புரிகின்றார்கள். அம்புகளை வெகுதூரம் வரை செல்ல எய்கின்றனர். போரில் வெற்றியளிக்கும் யானைகளுக்குச் சிறப்புப் பெயரிட்டு வழங்குகின் றனர். சிலர் நேர்த்தியான மேல் விரிப்புக்களையும், பொன்னாலான முகபடாங்களையும் அதற்குப் பரிசாக அளிக்கின்றனர். தினந்தோறும் அரசன் சமுகத்தில் யானைப்படை கொணர்ந்து காட்சியாக நிறுத்தப்படும். (2) நியாயத்திறம் :- பெருவீரனாகிய நம் சோழ னிடத்தில் நியாய பரிபாலனம் நிரம்பியிருந்தது. இவன் ஆட்சியின் நேர்மை, மேலே கூறிவந்த பற்பல செய்தி களாலும் விளக்கமானதே. மாமனு நூல் ஆராயும் நீதிக் குலோத்துங்கன் என்றார் கோவை யாசிரியரும். வேற்றரசரது கொடுங்கோன்மையைக் களைந்து செங்கோ லாட்சி நடைபெறுமாறு செய்தவன் இவன். பதின் மூன்றாவது நூற்றாண்டினரான சௌஜூ குவா என்னும் சீன ஆசிரியர் (Chau Ju-Kua) சோழர் நீதிமுறையைப் பற்றிச் சொல்லுவதாவது: குற்றம் புரிந்தோரை மந்திரிகள் தண்டிக் கின்றனர். குற்றம் அற்பமா யிருந்தால், குற்றவாளி ஒரு மரச்சட்டத்திற் கட்டப்பட்டுக் கோலால் 50, 70, அல்லது 100 அடிகள் அடிக்கப்படுவான். பெரும் பிழைகள் செய்தவர் சிரச்சேதம் செய்யப்படுவர்; அல்லது யானைக்காலால், தலை இடறப்படுவர். (3) தியாகச் சிறப்பு :- வள்ளன்மையில் தன் முன்னோர் பலரினும் சிறந்து விளங்கியவன், இச் சோழர் பெருந்தகை. இவன் காலத்துப் பெரும் புலவர்களுள்