பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 மூன்றாம் குலோத்துங்க சோழன் இவனால் ஆதரித்து அபிமானிக்கப்படாதவர் எவருமே இரார் என்று தோன்றுகிறது. தன்பால் வந்த கலை வாணர்க்கெல்லாம் கனக வருஷம் பொழிந்தவன் இவன். இவன் வழங்கிய பொன்களும் மற்றப் பொருள்களும் இவனைப் பாடிய கவிஞர் வீடுகளில் நிரம்பிக் கிடப்பதை நேரிற்கண்டு களித்தவர் போல, "புவி புகழ் சென்னிப்போ ரமலன் தோள் புகழ் கவிகள் தம் மனையெனக் கனக ராசியும் சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும் அவிரிழைக் குப்பையு மளவி லாதது (கிஷ்கிக். பிலநீங்கு. 35) என்று, தம் இராமாயணத்தில் உவமைமுகத்தால் கூறு கின்றார், கவிச்சக்ரவர்த்தி கம்பநாடர். தமிழ்வாணர்க்கு இவ்வாறு உதவியது போலவே, வடமொழிவல்லவரான அந்தணர்க்கும் ஏனைக் கலைஞர்க் கும் அளித்தவன் நம் வேந்தன். திருவொற்றியூரி லிருந்த வியாகரண சாஸ்திர சாலைக்கு இவன் இறையிலி செய்துள்ளான். மதுரா விஜயத்தில், அருமறை முழுதுணர்ந்த அந்தணர்க்கு அகரமேற்றி ஆதரித்தான் என்று இவன் மெய்க்கீர்த்தியும் கூறு கின்றது. (4) சமயாபிமானம் : -நம் வேந்தனது வைதிக மதப்பற்றையும் சிவபக்திச் சிறப்பையும் சமயநிலை கூறிய விடத்து விளக்கினேன். பொதுவாக, சிவாலயங்களில் இவனுக்குப் பத்தி சிரத்தை மிகுதியும் உண்டாயினும், தன் முன்னோர் வழிபட்டுவந்த தில்லையிலும் திருவாரூரி லும் இவனுக்கிருந்த அபிமானம் பெரிதாகும். தன்