பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 மூன்றாம் குலோத்துங்க சோழன் கொள்ளத்தக்க தன்றோ ? அரசர்கள் தாம் பிறந்த நாளில் கடவுளர்க்கு விழா நடத்த ஏற்பாடு செய்தல் பண்டை வழக்கமே. முதல் இராஜராஜன் மலைநாட்டுத் திருநந்திக்கரைச் சிவபிரானுக்கு, தான் பிறந்த சதய நாளில் திருவிழா நடத்திய செய்தியாலும் இது தெரிய லாகும். 'சதய நாள் விழா உதியர் மண்டலக் தன்னில் வைத்தவன் என்று சயங்கொண்டாரும் இதனைக் குறிப்பிடலாயினர். (6) தேவியர் : --நம் வேந்தனுடைய பட்டமகிஷி, "புவன முழுதுடையாள்' என வழங்கப்பட்டாள். சோழ மாதேவியர்கள் உலக முழுதுடையாள், ஏழுலகு முடையாள் என்று இவ்வாறு பேர்பெற்று வந்தமுறை யில், இப்பெயர் அவளுக்கு வழங்கியது. இவளே தலைமையரசி என்பது "புவன முழுதுடையாளோடும் செம்பொன் வீரசிம்மாசனத்து வீற்றிருந்தருளிய என்று சாஸனங்களில் இவ்வரசன் விசேடிக்கப் படுதலால் அறியலாம். இத்தொடரால் அரசன் ஓலக்கமாய் இருக் கும் போதெல்லாம் சிங்காதனத்தில் உடனிருக்கும் உரிமை இப் பட்டமகிஷிக்கு உண்டென்பது விளங்கும். பட்டங் கட்டுங் காலத்தில் தலைமைத்தேவி சிங்கா தனத்தில் அரசனுடனிருந்து அபிஷேகமும் முடியும் தரிக்கும் பெருமை உடையவள். நம் அரசனுடைய தமையன் சிறுவனாய் முடிசூடிய காலத்திலும் தேவி யுடன் அமர்ந்தே முடி தரித்தான் என்று தெரிகின்றது. இவ்வாறு, அறிவு திரு ஆற்றல் அழகு முதலிய உத்தம இலக்கணங்களெல்லாம் ஒருங்கமைந்து விளங்கி னான் நம் சோழ சக்கரவர்த்தி. இவன் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மலைமேலிட்ட தீபம் போலப் பிரகாசித்தது. வெற்றித்திரு இவன் திருப்புயங்களில் வீற்றிருந்து கொண்டு, எடுத்த காரியங்கள் எல்லாவற்றையும் இனிது