பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

குணாதிசயங்கள் 101 முடித்து வைத்தருளினாள். அதனால், இவன் நேர்நின்று பரிபாலித்த 38-ஆண்டுகளிலும் சோழ ஏகாதிபத்தியம் எல்லாப் பெருமைகளுடனும் நிலவியது. நாற்பது ஆண்டுகள் (கி.பி. 1218) வரையில் இவ்வேந்தனது சாஸ னங்கள் நாட்டில் கிடைத்துள்ளன. ஆனால், இவன் பின்னவனான மூன்றாம் இராஜராஜன் கி.பி. 1216-ல் முடி சூடியவன் என்று தெளியப்படுகின்றான். இதனால், நம் குலோத்துங்கன் தன் 38-ஆம் ஆண்டு முடிவில், தான் நிர்வகித்து வந்த ஆட்சி இராஜ்யபாரத்தைத் தன் வழித்தோன்றலிடம் சேர்த்துவிட்டு ஓய்வு பெற்றிருங் தான் என்றும், ஆயினும், இவன் சீவித்திருந்த அவ்வி ரண்டாண்டுகளிலும் இவன் பேராலேயே சாஸனங்கள் பயின்றன என்றும் தெரியவருகின்றன. இவ்வாறு இரண்டாண்டுகள் ஓய்வு பெற்றிருந்ததற்கு இவனது வயோதிகமும், இடைவிடாது உழைத்து வந்ததனால் தேகநிலை மனோதிடங்கள் குன்றிய துமே காரணமாக வேண்டும். இவ்வாறு மகாவீரனும் பெருவள்ளலுமாய்த் தென்னாடெங்கும் தன் புகழ்க்கதிர் பரப்பிய இக் குலோத்துங்கன், தன் அறுபதாம் வயதில் (அதா வது கி. பி. 1218-ல்) மேலோருலகம் எய்தினன்.