உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கான்சாகிப் புதுவையை விட்டு அகன்றபின் பிரன்டன் என்ற ஐரோப்பியனிடம் வேலைக்கு அமர்ந்தான் என்றும், அவன் துணையால் கல்வி யறிவு பெற்றான் என்றும் கூறுவர். கான்சாகிப் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்ச்சுகீஸ் ஆகிய அந்நிய மொழிகளிலும் தென்னிந்திய மொழிகள் சிலவற் றிலும் நல்ல பழக்கம் பெற்றிருந்தான். ஆனால், இம் மொழியறிவால் அவன் மனப்பண்பாடு எது வும் அடையவில்லை. கிடைக்கும் குறிப்புக்களை ஆராய்ந்து பார்த்தால் கான்சாகிப் ஆரம்பத்தில் நவாபு படையில் சேர்ந்து, மெல்ல மெல்ல உயர்நிலை களைப்பெற்று, இறுதியில் ஆங்கிலக் கும்பினியின் சேவகத்தில் ஈடுபட்டான் என்பதும் விளங்கும். கான் சாகிப்பின் மனைவியின் பெயர் மாசா; அவள் போர்ச்சுகீசியப் பெண். கும்மந்தான் கான் சாகிபின் இராணுவ வாழ்வு பற்றி நமக்குத் தெரியும் முதல் உண்மை , 'அவன் காவேரிப்பாக்கத்தில் நடந்த போருக்குப் பின்னால் கிளைவின்கீழ் நெல்லூரில் தான் உருவாக்கிய ஒரு சிப்பாய்ப் பட்டாளத்தோடு ஆங்கில இராணுவத் தில் சேவைக்கு அமர்ந்தான்' என்பதே. இந்த நிகழ்ச்சி நடந்த சந்தர்ப்பத்தில் ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் அமைதி நிலவியது. ஆனால், இந்தியாவிலோ, ஆங்கிலக் கும் பினிக்கும் பிரஞ்சுக் கும்பினிக்கும் இடையே கடும் போர் நடந்தது. கர்நாடகத்தில் யார் கொடிகட்டி ஆள்வது?' என்பதே போருக்குக் காரணம். இதை உள்ளத்துக்குள்ளே வைத்து வெளிக்கு இரு