பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொம்மைகளை இருகம்பெனிகளும் கையில் வைத் துக்கொண்டு, 'இதில் எந்தப் பொம்மை ஆர்க்காட்டு நவாப் ஆவது என்பதே எங்கள் போருக்குக் கார ணம்' என்று கூறிக்கொண்டன. ஆங்கிலக் கம் பெனியின் கையில் இருந்த பொம்மை முகம்மது அலி ; பிரெஞ்சுக் கம்பெனியின் கையில் இருந்த பொம்மை சந்தா சாகிபு . முகம்மது அலி கிருஷ்ணாநதி முதல் கன்னியா குமரிக் கடல்வரை தம் நாடு என்று வாயால் அளந்து காட்டினார். ஆனால், திருச்சிராப்பள்ளியில் தவிர வேறு ஓரிடத்தில் காலூன் றவும் முடியாத நிலை 1751இல் அவருக்கு இருந்தது. தலைநகராகிய ஆர்க்காடு உட்பட வட பகுதிகள் யாவும் பிரெஞ்சுக் கும்பெனி ஆட்டுவித்தபடி ஆடும் சந்தாசாகிபுக்கு ஆட்பட்டிருந்தன. நாட்டின் பிற பகுதிகளிலெல் லாம் குட்டி அரசுகள் கோலோச்சின. முகம்மது அலி ஒண்டி ஒடுங்கிக் கிடந்த திருச்சிராப்பள்ளியே பிரஞ்சுப் படைகளால் எந்த நேரத்திலும் கைப்பற் றப்படும் நிலையில் இருந்தது. இந்நிலையில் முகம்மது அலிக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து அவர் பெயரைச் சொல்லி நாடாளும் நிலை பெற்றுப் பிரஞ்சுக் கம் பெனியை ஒழித்துக்கட்ட உறுதிகொண்டது ஆங் கிலக் கும்பினி. எனவே, திருச்சிக்கு வந்த ஆபத் தைத் தவிர்க்கக் கருநாடகத்தின் தலைநகராகிய ஆர்க்காட்டுக்குத் தீவைக்கும் இராஜதந்திர முயற்சி யில் ஆங்கிலக் கும்பினி ஈடுபட்டது. அதற்கு ஏற்ற தளபதியையும் கண்டு பிடித்தது. அவர்தாம் இரா பர்ட் கிளைவ். ஆங்கிலப் பேரரசை அமைப்பதற்கு