உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழர் முன்னோர் பண்ணியவன் என்று புகழ்வர் திருமங்கையாழ்வார் . இச்சோழன் பக்திச் சிறப்போடு வீரச்சிறப்பும் பிற உத்தம குணங்களும் உடையனாயிருந்தான். கணைக் காலிரும்பொறை என்னுஞ் சேரமானுடன் இவன் கழு மலத்தில் பொருதுபெற்ற வெற்றித்திறத்தைப் பொய் கையார் பாடிய களவழி நாற்பதிலும், ஏனைச் சங்கச் செய்யுட்களிலும் காணலாம். இச்சேரமான் படைத் தலைவனாகிய கணையன் என்பவன் சேராது கொங்கு நாட்டைச் சேர்ந்திருந்த விளந்தை என்னும் ஊருக்குத் தலைவனானமையால் விளந்தைவேள் எனவும் வழங்கப் பட்டான். அவனது விளந்தையை அடுத்துள்ள கழு மலம் என்ற ஊரில் செங்கணானுக்கும் அவ் வேளுக்கும் பெரும்போர் மூண்டது. அதனில் அவனை வென்று, அவனுக்கு உரிய தாயிருந்த கொங்குநாட்டை இச் செங்கணான் தன் சோழ நாட்டோடு சேர்த்துக் கொண்டான். இஃதன்றி, வெண்ணி முதலிய இடத்தும் இவன் பகைவர்களை வென்ற செய்தி அறியப்படுகின்றது. இவனுக்கு நல்லடிக்கோன் என்ற மகன் ஒருவன் இருங் தான் என்று அன்பில் சாஸனம் கூறுகின்றது. இங் நல்லடிக்கோனது ஆட்சிச்சிறப்பு சங்கச்செய்யுளான அகநானூற்றிலும் (356) குறிப்பிடப்பட்டுள்ளது. 3. பிற்காலத்துச் சோழர் :- கோச்செங்கணானுக் குப்பின், அஃதாவது உத்தேசம் கி. பி. நான்கு ஐந்தாம் நூற்றாண்டு முதல், வடநாட்டரசர்கள் பெருவலி பெற்ற வர்களாய்த் தமிழகத்திற் புகுந்து, அதன் பெரும்பாகத் தைக் கைப்பற்றிக் கொண்டனர். அதனால், தமிழ் நாட்டு முடியுடை வேந்தர் மூவருமே தங்கள் பழைய பெருமை குன்றி அவர்கள் கீழ் அடங்கவேண்டிய தாயிற்று. விஷ்ணுகோபன் முதலிய பல்லவர்களும், அச்சுத விக்ராந்தன் முதலிய களப்பிரர்களும், சோழ