பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய தொண்டை நாடுகளில் ஆதிக்கம் பெற்று அரசாண்ட செய்திகள் நூல்களாலும் சாஸனங்களாலும் தெரியவருகின்றன. இவர்களுள், பல்லவர்கள் மிக்க வலி படைத்தவர்களாய்த் தென்னாட்டின் பெரும்பாகத்தைப் பல தலைமுறைகள் ஆட்சி புரிந்து வந்தனர். இவர்களது உள்நாட்டுத் தலைநகர் காஞ்சீபுரமும், கடற்கரைத் தலை ககர் மாமல்லபுரமும் ஆகும். இன்னோரது நீண்ட ஆட்சி, பெருமை பெற்றதென்பதில் ஐயமில்லை. இப்பல்லவ ருடைய ஆதிக்கமும், எட்டு ஒன்பதாம் நூற்றாண்டு களில் ஒரு முடிவு அடைந்தது. இதற்குக் காரணரா யிருந்தவர்கள் வடக்கே சளுக்கியர்களும், தெற்கே பாண்டியர்களும் ஆவர். அவ்விருவரும் பல்லவருடன் பகைமை கொண்டு நடத்திய போர்கள் பல. பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டிருந்த சோணாட்டு எல்லைப்புறமும், மழநாடு கொங்கு நாட்டுப் பகுதிகளும், இப் போர் வெற்றியால் பாண்டியரின் வசமாயின. இவ்வாறே, வடக்கில் சளுக்கியர் என்பார் பல்லவர் களைத் தாக்கி வெற்றி பெற்றனர். இவ்விதம் பல்லவர் ஆட்சி இருபுறமும் நெருக்குண்டதனால், தளர்ச்சி அடைந்தது. இத்தளர்ச்சி, ஒடுங்கிக் கிடந்த சோழர்க்கு ஊக்கமளித்து அவர்களது ஆற்றலைத் தோற்றுவித்தது. இக்காலத்தில் தங்கள் பழைய சுயேச்சையை நிலைநிறுத் துவதற்கு முதன் முதலில் துணிந்து வெளிவந்த சோழர் குலத்தோன்றல் பரகேசரி விஜயாலயன் என்பவன். இவன், தஞ்சைப் பிரதேசங்களில் பல்லவர் தலைமைக் குட்பட்டு ஆண்டுவந்த முத்தரையர்களை முதலில் வென்று, அப் பிரதேசங்களைத் தன்னடிப்படுத்தினான். இவ்வி ஜயாலயன் புரிந்த போர்ச் செய்திகளை அதிகம் அறிய இடமில்லையே னும், இவனே பிற்காலத்துச் சோழர்களின் குலமுதல்வனானவன் என்பதில் ஐயமில்லை.