உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

19 தன் ஆட்களில் 200 பேரை இழந்தான். திருவாங் கூராரும் ஏறத்தாழ இதே அளவு இழந்தனர். பகைவர்களுக்கு (பூலித்தேவருக்கு) இதைவிடச் சேதம் அதிகம். என்றாலும் கான்சாகி பின் தாக்குதலை முறியடித்தனர். போதிய போர்த்தள வாடங்களும் இல்லாமையால் கான் சாகிபு முற்று கையைக் கைவிட்டான். 1760 ஜனவரி 28 ஆம் தேதி கான்சாகிபு தோல்வியுற்ற செய்தி சென்னைக்கு எட்டியது. திருவாங்கூரார் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்; கான்சாகிபு திருநெல்வேலிக்குத் திரும்பினான். வாசுதேவநல்லூர்த் தோல்வி ஒன்று தான் கான் காகிபு கண்ட தோல்வி. வாசுதேவநல்லூரில் அடைந்த அவமானம் கான்சாகியின் வாழ்வைத் திருத்தவில்லை. பழி வாங்கும் நாளை எண்ணிக்கறுவவே செய்தது. இதற் கிடையில் 1760 டிசம்பரில் மட்டும் திருச்சியில் இருந்த காப்டன் ஜோஸப் ஸ்மித்துக்குக் கும்பினிக்குக் கட்ட வேண்டிய கப்பத்தொகை ரூபாய் 2 லட்சத்தை அனுப்பினான். இதே சமயத்தில் மாபூஸ்கானும் பூலித்தேவர் பிடியினின்றும் நழுவி ஓடிப் புதுக் கோட்டைத் தொண்டைமான் நிழலில் இளைப்பாறி நவாபிடம் மன்னிப்புப் பெற்று உயிர் பிழைத்தான். கான் சாகிபு 1761 ஆம் ஆண்டுவரை போராடிப் போராடிப் பூலித் தேவரின் கோட்டைகளைப் பிடித் தான் என்று சில குறிப்புக்கள் கூறுகின்றன. இவ் வாறு இராணுவ வாழ்வு தொடங்கிய நாள் தொட்டு விடுதலை வீரர்களைத் தாக்கியும் அழித்தும், கோழை களை வளர்த்தும் வாழ்வித்தும் நாசவேலைகளை நடத்தி