பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின் சதித்திட்டங்கள் நாளுக்கு நாள் உரம் பெற் றன. அவை ஒன்று விடாமல் ஆங்கிலக் கும்பினிக் கும் தெரிந்தன. கான்சாகியின் பிரெஞ்சுத்தோழன் தளபதி மார்ச்சந் ஆங்கிலக் கும்பினிக் கொடியைக் கொளுத்தி விட்டுப் பிரெஞ்சுக் கொடியைக் கான் சாகிபின் அனுமதி பெற்றே கோட்டைகளின் மீது உயர்த்தியது முதற்கொண்டு எல்லாச் செய்திகளும் சென்னைக்கு எட்டின ; கும்பினி அரசாங்கத்தின் கண்கள் சிவந்தன ; எட்டுத் திசைகளிலும் இருந்த ஏகாதிபத்திய ஏஜெண்டுகளுக்கு எச்சரிக்கைச் செய் திகள் பறந்தன. எந்த வினாடியிலும் கான்சாகிபைத் தாக்கி முறியடிக்கக் கும்பினிப் படைகள் தயாரா யின. இதற்கிடையில் கான்சாகிபைச் சென்னைக்கு வந்து சமாதானங்களைக் கூறவும் சந்தேகங்களை நீக்கவும் கும்பினி அரசாங்கம் அழைத்தது. ஒவ் வொரு முறையும் நொண்டிச் சமாதானங்கள் கூறி, வரமுடியாது என்றான் கான்சாகிப். அதைக் கேட்ட வெள்ளை வேந்தர்களின் வயிறு பற்றி எரிந்தது. ஏறத்தாழ இரண்டாண்டு காலமாகக் கான் சாகிபு தன்னைத் தென்பாண்டிப் பாளையங்களின் சக்கர வர்த்தி யாக்கிக் கொள்ளச்செய்த சதிகள் யாவும் பல வாயில்களாலும் தெரிந்து விட்டன. எனவே, எல்லாக் கடமைகளிலும் பெருங்கடமை கான் சாகி பைக் கொல்லும் கடமையே' என்று கும்பினி வர்க்க ம் குமுறியது. கும்பினி அரசாங்கத்துக்கு 1763 மார்ச் 24-ஆம் தேதி வெள்ளைத் தளபதி லாரன் சிடமிருந்து கிடைத்த கடிதம் வருமாறு கான் சாகிபு விகவா