உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

23 சத்தைக் கைவிட்டு விட்டான். உங்கள் உத்தரவு களை எல்லாம் உதறி எறிந்து விட்டான். தன்னைச் சுதந்திரப் புருஷனாகப் பிரகடனம் செய்து விட் டான். இந்த மனிதனின் மாமேதையையும் பேரா சையையும் கருதும்போதும் தன்னிடமுள்ள பெரும் பட்டாளத்தை ஒரு பெரும்போருக்கு இவன் தயார் செய்வதைப் பார்க்கும்போதும் உடனடியாக இவ னுடைய ஆக்கிரமிப்புகளை ஒழிப்பது மிகவும் அவ சியமாகிறது. மேலும், இவன் நாளும் தரங்கம்பாடி, நாகப்பட்டினத்தில் உள்ள பிரஞ்சுக்காரர்களிட மிருந்தும், மைசூர் ஹைதர் அலியிடமிருந்தும் உதவி கள் பெற்ற வண்ணம் இருக்கிறான். இவனை இப் படியே விட்டால் நம்மால் அடக்க முடியாத அள வுக்குப் பெரும் படைப்பலம் பெற்றவனாக ஆகி விடு வான். அதன் விளைவாக ஆர்க்காட்டு நவாபு நமக் குத் தரவேண்டிய கடன்களைத் தராமற் போவ தோடு கம்பெனி மேலும் பெருத்த செலவுக்கு இரை யாக நேரிடும்; கான்சாகிபை அழிக்கக் குறைந்தது 900 ஐரோப்பியர்களும் 5000 கம்பெனிச் சிப்பாய் களும், 2000 குதிரைப்படை வீரர்களும் ஏராளமான பாளையக்காரர் உதவியும் இன்ன பிறவும் தேவை. இவ்வாறு லாரென்ஸ் எழுதிய கடிதத்தாலும், கான்சாகிபைப் பற்றிய வேறு பல உண்மைகளை உணர்ந்தமையாலும் தீர ஆலோசித்துக் கும்பினி அரசாங்கம் கான்சாகிபைக் கசக்கி எறிய முடிவு செய்தது. வெள்ளைத் தளபதிகளாகிய பிரஸ்டன், லாரென்ஸ் முதலியவர்களைப் பெரும் படையுடன் கான்சாகிபை அழிக்கப் புறப்படுமாறு கட்டளையிட்