பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை தமிழக வீரர்களுள் தனிச் சிறப்புக்கள் பல வாய்க்கப் பெற்ற பெருவீரன் கும்மந்தான் கான் சாகிபு. இலக்கியத் திலும் வரலாற்றிலும் இடம்பெற்ற அம்மா வீரனின் கதையை 'கலைமகளு'க்குக் காணிக்கையாக 1959-ஆம் ஆண்டு மே, ஜூன் திங்கள்களில் படைத்தேன். அப் படையலே இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. அளவால் சிறியதே ஆயினும், முதன் முதலாகத் தமிழில் கும்மந்தான் கான் சாகிபைப் பற்றி வரலாற்று ஆராய்ச்சி நோக்குடன் வெளிவரும் நூல் என்னும் அருமைப்பாடு உடையது. 'கலைமகள்' கருணைக்கும் தமிழ் மக்களின் ஆதரவுக் கும் நன்றி செலுத்தி இந்நூலை வெளியிடுகிறேன். இந்நூல் அச்சாகும் காலத்துத் திருத்தங்கள் செய் து தவிய ஆசிரியர் வித்துவான் உயர் திரு-சி. அருணை வடிவேலு முதலியார் அவர்கட்கு எனது உளங் கனிந்த நன்றி உரித்து. வாழ்க தமிழகம்! ந. சஞ்சீவி 1344