உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 பிரஞ்சுத் தளபதி மார்ச்சந் சதிகாரர்களோடு சேர்ந்து கான்சாகிபைக் கொண்டுபோய் ஓர் அறை யில் அடைத்தான். அதிகாரிகள் செய்தது கோட்டை யெங்கும் காட்டுத் தீப்போல் பரவிவிட் டது. கான்சாகியின் மனைவியான பறங்கிப் பெண் மார்ச்சந்துக்கு ஒரு கடிதம் எழுதி, 'ஐயனே, நாட் டையும் கோட்டையும் அதில் இருக்கும் நானாவிதச் செல்வங்களையும் உனக்கே தந்துவிடுறேன் ; என் நாயகனை மட்டும் விட்டுவிடு' என்று கண்ணீ ர் விட்டுக் கதறி அழுதாள். ஆனால், மார்ச்சந் கோரச் சிரிப்புச் சிரித்தான். அந்தப் பிரெஞ்சுத் தளபதி யின் சதிகாரச் செயலைக் கேட்ட ஒரு முதலி, தாயை இழந்த சேய்போல் துடித்துப் புலம்பிக் கோட்டை யெல்லாம் சுற்றி வந்து கூவினான். அவனைச் சுற்றி நூற்றுக்கணக்காண வீரர்கள், 'எங்கே எங்கள் கான்சாகிபு? எங்கே அந்த மார்ச்சங்?' என்று கேட்டவண்ணம் வாளையுருவி வலம் வந்தனர். நிலைமைய உணர்ந்த மார்ச்சந் முதலியின் மார்பில் குறிபார்த்துச் சுட்டுக் கீழே வீழ்த்தினான். தலைவன் சாயக்கண்டதும் ஆத்திரம் அடைந்த வீரர்கள் செய்வதறியாது திகைத்து ஓடி மறைந்தனர். மார்ச்சந் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். தன் கையாட்களை அனுப்பி அதே அக்டோபர் 13-ஆம் தேதி நள்ளிரவில் ஆர்க்காட்டு நவாபிடமும் ஆங்கில நாடோடிகளிடமும் உறவு பேசினான்; ஒப்பந் தங்களைக் கூறினான். அஞ்சா நெஞ்சன் கான் சாகிபை, கைகால்களையும் அசைக்கமுடியாத நிலை யில் பந்துபோல் சுருட்டிக் கட்டிப் பகைவர்களின்