பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கார்க்கோடகன் கடித்துக் கருகியவர் மேனியெல்லாம் (அவர்) தேகம் தெரியாதே தேசாந்தரம் வசித்தார் தமயந்தி நாயகரைத்தேடி வனந்திரிந்து பதிவிரதை அக்கினியால் வேடனை நீறாக்கி நாயகரைக் காணாதே ராஜ்ஜியத்தில் வந்திருந்து (தன்) பதிவிரதா தர்மத்தால் பர்த்தாவைத் தானடைந்தாள் இன்னம் புதுமையுண்டு ஏற்ற குலபாண்டவர்காள் இன்னோரிதிகா ஸம் எடுத்துரைப்பேன் பஞ்சவர்காள். மார்க்கண்டேயர் ஸ்ரீராமமூர்த்தி சரிதமுரைத்தல். தசரதபுத்திரனார் ஸ்ரீராமச்சந்திரனார் கைகேயி வாக்கியத்தால் கானகத்திலே அலைந்து வைதேகியைப் பிரிந்து மானையவர் பின்தொடர்ந்தார் வாளாக்கன் வந்து மைதலியைக் கொண்டு செல்ல திரும்பிவந்த ராகவரும் சீதையைக் காணாதே சுக்ரீவன் என்னுமந்தத் தோழனுடன் கூடவந்து அலைகடல் தன்னில் அணைபோட்டு லங்கை வந்து தசமுகனைச் சம்ஹரித்து சீதை சிறை மீட்க (அவள் பதிவிரதா தருமத்தால் அக்கினிப் பிரவேசம் செய்ய அதிக சுகிர்தத்துடனே அயோத்திதனை யாண்டிருந்தார் இன்னம் புதுமையுண்டு ஏற்றகுல பாண்டவர்காள் இன்னமொரு பதிவிரதை இதிகாசம் நானுரைப்பேன். மார்க்கண்டேயர் சாவித்திரி சரிதமுரைத்தல். மத்திரதேசம் மகிமையுள்ள ராஜ்ஜியத்தில் அசுவபதி யென்னும் அவருமொரு ராஜாவாம் தருமம் தவறாதே தரணி தன்னை ஆண்டிருந்தார் புண்ணியங்கள் செய்து புவனங்கள் ஆண்டிருந்தார்