பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்று சொல்ல சாவித்திரி ஏது சொல்வர் ராஜாவும் உலகமெல்லாந் திரிந்தேன் உன் அழகுக்கேற்ற பர்த்தா வையகமெல்லாந் திரிந்தேன் வடிவுக்கிசைந்த பர்த்தா (உன்) அழகுக்கிசைந்த பர்த்தா காணேனே ஆரணங்கே (8) தானே வரித்துவா தார்குழலே குற்றமில்லை (என்று ) அச்வபதிராஜா அவரும் விடையளிக்க. சாவித்திரியம்மன் கணவரை வரித்தல். அப்பொழுது சாவித்திரி அதிகலஜ்ஜை தன்னுடனே மாதாவிடையளிக்க மனதொத்த தோழியுடன் அநேகஞ் சேனையுடன் அந்தப்புரங் கடந்து தேரின் மேல் ஏறி தேசமெல்லாம் ஆராய்ந்து தேசமெல்லாங் காணாமல் திகைத்து வனத்தில் வந்தாள் (ஒரு) நந்தவனந்தனிலே ஞாயிறு உதித்தாப்போல் நல்லமலரெடுக்கும் நாயகரைக் கண்டவுடன் புஷ்பம் பறிக்கும் புண்ணியரைக் கண்டவுடன் இவர்தாம் நமக்கேற்ற இஷ்டபர்த்தா என்றறிந்து மனதுக்கிசைந்த பர்த்தா வரித்தே திரும்பி வந்தாள் அப்பொழுது நாரதரும் அங்கே எழுந்தருளி அசுவபதி கொலுவில் அவருமங்கு வீற்றிருந்தார் நாரதர் பிதாவையும் நன்றாய் நமஸ்கரித்தாள் நாரதர் பார்த்து ராஜனுடன் ஏதுரைப்பர் கன்னிகைக்குத் தக்க கணவரை நீர் தேடாமல் (நீர்) தாமிருக்க ராஜாவே (அவள்) தானே வரித்து வந்தாள் (என்று) மங்கையந்த சாவித்திரிமதிமுகத்தைத் தான் பார்த்து (அம்மா) யாரைவரித்து வந்தாய் அன்னமே சொல்லு (மென்றார் சாலுவதேசாதிபதி தன்பதியைத் தானிழந்து காட்டினில் வந்து கடுந்தபசு செய்திருக்கும்