உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அந்தரங்க தோழியர்கள் அம்மனண்டையிற் சூழ்ந்து மங்களங்கள் பாடி மான் கவரி வீசினார்கள்: பொற்றாமரை நிறத்தாள் பூர்ணசந்திரன் போல் முகத்தாள் கட்டழகி சாவித்திரி கைதனிலே காப்பிசைத்தார் தமோ மணி மார்பன் சத்தியவான் அப்பொழுது விக்கினங்களில்லாதே விரதங்கள் செய்துமவன் சாந்தியுடன் ஓமம் சத்தியவான் செய்து மப்போ பரதேசிக் கோலம் புறப்பட்டார் பாவனையாய் அச்வபதிராஜா அருகினிலே கிட்ட வந்து மஞ்சள் மணித்தேங்காய் வாழ்த்தியவர் கைக்கொடுத்து கன்னிகையை நான் தருவேன் என்றே அழைத்து வந்தார் ஆனைமே லேறி அலங்காரக் காக்ஷியுடன் மாலையிட்டு சாவித்திரி மணவாளர் தன்னுடனே பூவால் அலங்கரித்த பொன்னூஞ்சல் ஆடி நின்றாள் பொன்னூஞ்சல் தானாடப் பெண் கொடிமார் தான் பாட வாத்தியங்கள் தான் முழங்க மங்கையர்கள் தான் பாட நிறைநாழி முத்தெடுத்து நெய்விளக்குத் தானெடுத்து மங்களஹாரத்தி எடுத்தார்கள் மங்கையர்கள் வேதகோஷங்களுடன் விருதும் பலமுழங்க விரைக்கோட்டைமேலே வீற்றிருந்தார் ஸத்தியவான் அச்வபதி ராஜாவும் அவருடைய தேவியுமாய் சத்தியவான் கால்களைப் பொற்தட்டின் மீதுவைத்து பாலினாற் காலலம்பி பட்டாலே தான் துடைத்து தார் கன்னிகையைக் கைப்பிடித்து சத்தியவான் கைக்கொடுத் கன்னிகாதானம் காக்ஷியுடன் செய்த பின்பு மறையோர்கள் கைக்கொடுத்து மங்கிலியம் வாழ்த்து மங்கிலியம் தொட்டு மறையோர்கள் எல்லவரும் மென்றார் வாழ்வீர் வளமையுடன் மைந்தர்களைப் பெற்றிடுவீர்