பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மூன்றாம் குலோத்துங்க சோழன் காட்டைத் திறமையுடன் ஆண்டுவர நேர்ந்தது. இவர் களுக்கும் மேலைச் சளுக்கியர்க்கும் மூண்ட பெரும்போர் கள் பல. இவற்றிலெல்லாம் சோழர்களே வெற்றி பெற்றனராயினும், சிலர் அப்போர்களில் இறந்து போயினர். இவருள், கடைசி மகனான வீரராஜேந் திரன் அறிவாற்றல்களால் பெருமை பெற்று விளங்கினான். வீரசோழன் என்றும் இவன் வழங்கப்பட் டனன். இவன் ஆட்சிக் காலத்தில், புத்தமித்திரர் என்ற பெரும் புலவர் விளங்கி, வீரசோழியம் என்ற ஐந்திலக் கண நூலொன்றை இவன் பெயரால் இயற்றினார். 11. முதலாம் தௌகித்திர பரம்பரை :- இவ் வீரராஜேந்திரன், அரசுக்குரிய மகப்பேறின்றியே கி.பி. 1070-ல் இறந்துவிட்டான். அடுத்த பட்டத் துக்குரியவர் யாவர் என்பது பற்றிய விவாதமும் குழப்ப மும் நாட்டில் உண்டாயின. வீரராஜேந்திரனுக்கு அதிராஜேந்திரன் என்ற மகனொருவன் இருந்தான் என் பர். ஆனால், சோழவரசை அடைவதற்குரிய குல வுரிமை அவனுக்கு இல்லை. ஆதலால், நாட்டு மக்களெல் லோரும் அவனைச் சிங்காதனம் ஏற்றுவதில் வெறுப்புக் கொண்டிருந்தனர். ஆயினும், அந்த அதிராஜேந்திர னுக்கு வேண்டிய உறவினர்களும் தலைவர்களும், வீரராஜேந்திரன் இறந்ததும் அவனை அரசனாக்கிப் பட்டத்தில் அமர்த்தினார்கள். இது, சோணாட்டில் பெருங்குழப்பத்தையும் போரினையும் உண்டாக்கியது. வீரராஜேந்திரனுக்குப் பின் பட்ட வுரிமை அவன் மரு மகனும் வேங்கை நாட்டுச் சாளுக்கிய அரசன் இராஜ ராஜேந்திரன் மகனுமான இராஜேந்திரனுக்கு உரியது என்றே, அவன் தாய்ப் பாட்டியாலும் பிற அரசாங்கத் தலைவர்களாலும் முன்னமே முடிவு செய்யப்பட்டிருக் தது. இந்த இராஜகுமாரன், தன் அம்மானான சோழ