________________
13 சோழர் முன்னோர் வேந்தன் இறந்தபோது வடநாட்டில் சக்கரக்கோட்டம் என்ற இடத்தில் நடந்து வந்த போரில் முனைந்து நின் றான். அப்போது மாமன் இறந்த செய்தி இவனுக்குச் சில நாட்களில் எட்டியது. எட்டியதும் இவன் வட நாட்டினின்றும் விரைந்து வந்து, சோணாட்டின் குழப் பங்களை யெல்லாம் ஒழித்தும், தன் உரிமையைக் கைப் பற்றியவனைக் கொன்றும், தௌகித்திர பாத்தியங் கொண்டாடிச் சோழ சிங்காதனத்தில் அமர்ந்து அரசாளுவானாயினான். இவனே முதற் குலோத்துங்கன் என்பவன். வடநாட்டில் கீழைச் சளுக்கியர்க்குரிய வேங்கை மண்டலமும், தென்னாட்டுச் சோழ மண்டலம் தொண்டை மண்டலம் முதலியனவும் இக்குலோத்துங் கனுக்குக் குலவுரிமையானமையால், சோழ சாம்ராஜ்யம் இவன் காலத்தில் முன்னிலும் பரப்பும் பெருமையும் பெற்று விளங்கியது. அறிவும் திருவும் ஆற்றலும் படைத்த பெருவீரனாகிய இவன் தனக்கு அடங்கா திருந்த கலிங்கவரசனைக் கீழ்ப்படியச் செய்வதற்காகத் தன் சேனாதிபதியான கருணாகரத் தொண்டைமானைப் பெரும் படைகளுடன் ஏவி, அவனைப் போரில் வென்று கலிங்க நாட்டையும் தன் கைவசப்படுத்தினான். இவ் வெற்றியே கலிங்கத்துப் பரணி என்ற நூலில் சயங் கொண்டார் என்ற பெரும் புலவரால் புகழ்ந்து பாடப் பட்டது. இவன் 45 ஆண்டுகள் நீதி வழுவாமல் ஆட்சி புரிந்து வந்தான். இவனுக்கு அபயன், விஜயதரன் என்ற வேறு பெயர்களும் உண்டு. மகன் வழிப் பரம் பரையில் வந்த சோழவரசர் குடியுரிமை, மகள் வழியில் மாறியது இவன் காலத்திலேயே யாகும். இக்குலோத்துங்கனாகிய அபயனுக்கு மகன் விக்கிரம சோழன். இவன் கி. பி. 1117-1134 வரை யில் ஆட்சி புரிந்தான். இவன் ஆட்சியில் எங்கும்