உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மூன்றாம் குலோத்துங்க சோழன்.djvu/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்ச் செயல்கள் 1. வடநாட்டுப் போர் இக்குலோத்துங்கனது நீண்ட ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த போர்கள் பல. இவன் சிங்காதனம் ஏறியதும், இவன் நோக்கம் முதலில் வடக்கே சென்றதென்பது இவன் சாஸனங்களால் தெரிய வருகின்றது. சோழ ஏகாதிபத்தியத்தில் அடங்கித் தன் முன்னோர் காலமுதல் திறைகட்டிவந்த வடுக அரசர்கள், சிலகாலமாக அது செய்யாமல் மறுத்துச் சுவாதீனங் கொண்டாடி வந்தனர். அவர்களை அடக்கிவருவதற்கே இவன் அங்குப் படை யெடுத்துச் சென்றான். அப்போது இவனை அவ் வடுகர் எதிர்க்க, அவர்களை முழுதும் முறியடித்து ஓட்டி, அவர்கள் நாட்டைக் கவர்ந்து வெற்றியுடன் காஞ்சீபுரம் புகுந்தனன். இவ்வரசர்கள் கொல்லாபுரம், கலிங்கம், வேங்கைமண்டலம், உறங்கை என்ற ஓரங்கல் முதலிய நாடுகளை ஆண்டவர்கள். 'எழுகலிங்கமும் கொல்லாபுர மும் பொருதோன் குலோத்துங்கன்' என்று இவன் கோவையும் இப்போரைக் கூறுதல் காணலாம். இவர்கள் ளெல்லாரும் முடிவில் நம் குலோத்துங்கனது தனியாணை யை ஏற்றவர்களாய், அக்கச்சிமா நகர்க்கே வந்து திறை கட்ட, அவர்களிடம் கோபம் மாறி, அத்திறைகளை ஏற் றுக் கொண்டு தன் நாட்டிற்குத் திரும்பினான். இவ் வெற்றியே குலோத்துங்கனது கன்னிப்போரின் பய னாகக் கருதலாம். 2. தென்னாட்டுப் போர் இனி, குலோத்துங்கன் தெற்கே நடத்திய போர்களாவன : (1) மதுரை கொண்டது (2) பாண்டியன் முடித்தலைக் கொண்டது 1077-3