________________
30 மூன்றாம் குலோத்துங்க சோழன் சேனைகளைத் திரட்டிக்கொண்டு மதுரையைத் தாக்கு வதற்குப் புறப்பட்டான். அதனை அறிந்ததும், குலோத் துங்கன், சோழியப் படைகளைத் திரட்டிக் கொண்டு, தானும் அவனைத் தாக்க அதிவேகமாகச் சென்றான். இரண்டு படைகளுக்கும் மதுரைக்குக் கிழக்கே நெட் டூரில் பெரும்போர் மூண்டது. இதிலும் பாண்டியன் படைகள் சோழசேனைகளால் முற்ற முறியடிக்கப் டன. பாண்டிய முன்னோர்க்குரியதும் வீரபாண்டியனால் தரிக்கப்பட்டிருந்ததுமான கிரீடத்தைக் குலோத்துங் கன் அப் போரில் கைப்பற்றிக் கொண்டதோடு, அவன் பட்டத்துத் தேவியையும் சிறைபிடித்துத் தன் ஊருக்கு அனுப்பிவிட்டான். இவ்வாறு சேனைகளோடு தன் முடியையும் தேவியையும் இழந்த வீரபாண்டியன், இனி என்ன நேருமோ' என்று அஞ்சி, சேரரது மலை நாட்டுள்ள கொல்லத்திற்குத் தன் குடும்பத்துடன் ஓடி யொளித்தனன். அந்நாட்டரசனான சேரன், பாண்டிய னுக்குத் தான் உதவி புரிந்தால் தன்னையும் சோழன் சும்மா விடான் என்பதை நன்கறிந்து, முடிவில் பாண் டியனோடு சென்று குலோத்துங்கனைச் சரண மடைந் தான். இவ்வாறு அடைக்கலம் புகுந்த அவ்விருவரையும் மரியாதையுடன் ஏற்று, அவருள் வீரபாண்டியனுக்கு ஒரு பகுதி நாடும் முடியும் அளித்தும், சேரனுக்கு அவன் செல்வத்தை வழங்கியும் ஆதரவு காட்டித் தன் கீழ் அமரச் செய்தனன் குலோத்துங்கன். இது நடந்த போது, கைகயன் (கைதவன் பாண்டியன் ) தன் மகனுக் குப் பருதிகுலபதி என்ற பெயரைச் சூட்டி, இச் சோழன் முன் நிறுத்தவே, இவன் மனமகிழ்ந்து, அப் பாண்டியன் மகனுக்கு "இருநிதியும் பரிசட்டமும் இலங்கு மணிக்கலனு நல்கினான் என்று இவன் மெய்க்