________________
போர்ச் செயல்கள் 29 அவனைக் குலோத்துங்கன் உடனே தழுவி ஏற்றுக் கொண்டான். இதினின்று, அப்போது மதுரையை ஆண்டுவந்த வீரபாண்டியன், நம் சோழனுக்கு அனு கூலமாய் இல்லாமல் வெறுப்புக்கு உரியவனாயிருந்தான் என்று தோன்றுகிறது. அவ்வாறில்லையேல் மதுரையா சுக்குச் குலசேகரன் வழியினரே அதிக பாத்தியதை உடையவர் என்று எண்ணி, அவ் விக்கிரமனை இவன் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். எது காரண மாயினும், குலசேகரன் மகனை ஆதரிப்பது தெரிந்ததும், வீரபாண்டியன் நம் சோழனுக்கு வெளிப்படையாகவே பகைவனானான். ஆதலால், பெரும்படையுடன் குலோத் துங்கன் சென்று மதுரைப் பக்கத்தில் அப்பாண்டிய னுடன் கடும் போர் தொடுத்தான். அந்த யுத்தத்தில் வீரபாண்டியன் மகன் இறந்ததோடு, பாண்டியனது சிறந்த ஏழகப் படைகளும் மறவர் படைகளும் அழிந் தன. அவனுக்கு உதவியாக வந்த சிங்களப்படைகள் மூக்கறுப்புண்டு பரிபவப்பட்டுக் கடல்வழியே இலங்கை நோக்கி ஓடின. இவ்வாறு பகைவர் சேனைகள் நிலை குலைந்து சிதறியவுடனே "மதுரையும் அரசும்கொண்டு ஜயஸ்தம்பம் நட்டு, அம்மதுரையும் அரசும் அடைந்த பாண்டியற்கு அளித்தருளி" னன் நம் சோழர் பெரு மான். பாண்டிய நாட்டில் இவன் நடத்திய முதற்போர் இது. (2) முடித்தலை கொண்டது :- மேற்கூறியபடி தமையன் இராஜாதிராஜன் காலத்தில் அரும்பாடு பட் டுப் பெற்ற அரசையும் தலைநகரையும், அவன் தம்பியால் இழக்க நேர்ந்த அவமானம் பொறுக்காத வீரபாண்டியன், குடமலை நாட்டுச் சேரன் உதவியைப் பெற்று, இழந்த வற்றை மீட்க வழிதேடினான். தக்க உதவி தனக்குக் கிடைக்கவே, அப்பாண்டியன், சிதறிக் கிடந்த தன்