________________
36 மூன்றாம் குலோத்துங்க சோழன் (6) மதுரையில் வீராபிஷேகமும் விஜயாபிஷேக மும் செய்துகொண்டது :- கச்சிகொண்டருளியதை அடுத்துச் சாஸனங்கள் புகழுங் குலோத்துங்கனது அரிய செயல்கள் , இவன் புரிந்த வீராபிஷேக விஜயா பிஷேகங்களாகும். இச்செயலை, இவனது 26-ஆம் ஆட்சியாண்டில் அமைந்த திருவொற்றியூர்க் கல்வெட்டுக் குறிப்பிடுதலால், அந்த ஆண்டுக்கு அதாவது கி.பி. 1204-5க்குச் சிறிது முன்பு- இவ்விசேடம் நடந்த தாக வேண்டும். இவ்வபிஷேகங்களைச் சோழன் செய்து கொள்ளுதற்குக் காரணமான சம்பவங்கள், குடுமியான் மலை மெய்க்கீர்த்தி முதலியவற்றிலிருந்து அடியில் வரு மாறு தெரியவருகின்றன. குலோத்துங்கன் சோரிடமிருந்து கருவூரைக் கைப் பற்றி, அந்நகரிலேயே சோழகேரளன் என்ற பட்டப் பெயரையும் விசயமாமுடியையும் சூடிக்கொண்டு, வீரமா முடியையும் புனைதற்கு எழுந்தான். அக்காலத்தில், தன்னால் முன்பு சிங்காதனம் பெற்ற விக்கிரம பாண்டியன் மகனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தனன். இப்பாண்டியன் தான் ஆளத்தொடங்கிய (கி.பி. 1190) சில ஆண்டுகட் கெல்லாம், தன் தந்தை போலச் சோழர் ஆதிக்கத்துக்கு உட்பட்டிராமல் சுதந்திரம் பாராட்டியதோடு, குலோத் துங்கனுக்கு விரோதமான செயல்களையும் செய்து வந்தான். பாண்டி நாட்டில் காணப்படும் இக்குலசேக ரனது ஆடம்பரமான மெய்க்கீர்த்திகள், சோழனுடன் இவன் பகைமை பாராட்டிவந்தவன் என்பதைக் குறிப் பிடுகின்றன. குலோத்துங்கனுடைய தமையன் காலத்தில் இரு முறையும், இவன் காலத்தில் இருமுறையுமாகப் பாண்டிய நாட்டில் விளைந்த நான்கு பெரும்போர்களால் சோணாட்